Header Ads



சண்டித்தனம் செய்த டட்லி சிறிசேன - நடந்தது என்ன..? (வீடியோ)


நாட்டின் முன்னணி அரிசி வர்த்தகர்களினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போது, அரிசி விலை தொடர்பிலான முறுகல் நிலை காரணமாக அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

அரலிய அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன மற்றும் நியூ  ரத்ன அரிசி ஆலை உரிமையாளரான லங்கேஸ்வர மித்ரபால ஆகியோருக்கு இடையில் இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அரசி விலை அதிகரிப்பிற்கு இடமளிக்க போவதில்லை எனக்கூறி அந்த செய்தியாளர் சந்திப்பில் இருந்து டட்லி சிறிசேன வெளியேறினார். 


எதிர்வரும் 3 மாத காலம் வரை அரசின் கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாக அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலைகளை அரசாங்கத்திற்கு பொறுப்பேற்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

எவ்வாறாயினும், இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற நிவ் ரத்ன அரிசி ஆலை உரிமையாளர் லங்கேஸ்வர மித்ரபால அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு வழங்க முடியாது என அறிவித்தார். 

இதனையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்த. அவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஏனைய அரிசி ஆலை உரிமையாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.


No comments

Powered by Blogger.