Header Ads



இலங்கையின் பணத்தை திருடிய அமெரிக்கருக்கு ட்ரம்பின் தண்டனை குறைப்பு


 இலங்கை அரசாங்கத்திடமிருந்து பணத்தை மோசடி செய்தமை மற்றும் ஏனைய காரணங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள, அமெரிக்க முதலீட்டாளரும் அரசியல் நிதி திரட்டுபவருமான இமாத் சுபேரியின் தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, அவருக்கான 12 ஆண்டு சிறைத்தண்டனையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்ப் முழுமையாகக் குறைத்துள்ளார்.


அமெரிக்க அரசாங்கத்தின் உயர் மட்ட தலைவர்கள் மத்தியில், இலங்கையின் பிம்பத்தை மீண்டெடுக்கும் பிரசாரத்துக்காக, அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெருமளவு பணத்தை பெற்றிருந்தார்.


தரவுகளின்படி, அவர் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து 6.5 மில்லியன் அமெரிக்கடொலர்களை பெற்றிருந்தார். எனினும் அதில் 5.65 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை தனக்கும் தனது மனைவிக்கும் நலனுக்காகப் பயன்படுத்தினார்.


அத்துடன், இலங்கையிடம் உறுதியளித்த, உரிய பணிகளை மேற்கொள்ளவில்லை என்ற அடிப்படையில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு 12 வருட சிறைத்தண்டனையும் அளிக்கப்பட்டது.


எனினும், 2025 மே 22ஆம் திகதியன்று ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட மன்னிப்பு திட்டத்துக்கு அமைய, சுபேரியின் முழு தண்டனையும் குறைக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.