Header Ads



விளமிடிர் புடினுடன் நேரடியாக ​பேச வேண்டும் - அடம்பிடிக்கும் வீரவங்ச


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் ஜனாதிபதி கோட்டாபய நேரடியாக உரையாடினால் அங்கிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும் என்று விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இலங்​கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெடரி உடன் விமல் வீரவங்க தலைமையிலான சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் 11 கட்சிகளின் கூட்டமைப்பு இன்று சந்திப்பொன்றை நடத்தியிருந்தது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட விமல் வீரவங்ச தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் பெற்றுக்கொள்வதாயின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச முதலில் நேரடியாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நேரடியாக பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பலம் வாய்ந்த குழுவொன்றை புடினுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று ரஷ்ய தூதுவர் தெரிவித்தார்.

ஏரோப்ளொட் விமான சம்பவம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ள போதும், புடினுடன் நேரடித் தொலைபேசி உரையாடல் மூலம் அதனைத் தீர்த்துக்கொள்ளும் சாத்தியம் இருப்பதாகவும் விமல் வீரவங்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.