Header Ads



அலி சப்ரியின் சொத்துக்களுக்கு சேதம் - போலியான கைதுகள் நடைபெறுகிறதா..? (வீடியோ)


புத்தளத்தில் இடம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களான சின்தக மாயா துன்ன மற்றம் அலி சப்ரி றஹீம் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என்பன சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதாக புத்தளம் பொலீஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட புத்தளம் நகர சபை உறுப்பினர் முஹம்மத் டில்சான் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 9 ஆம் திகதி புத்தளம் நகரத்தில் இருந்து ஊர்வலமாக சென்றவர்கள்  கிரிவெவ வீதியில் அமைந்துள்ள பொதுஜன முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சின்தக அமல் மாயாதுன்னவின் வீட்டுடன் கூடிய அலுவலகத்தை சேதப்படுத்தியத சம்பவத்துடன் தொடர்புபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் வாக்கு மூலமொன்றினை வழங்க புத்தளம் பொலீஸ் நிலையம் வருமாறு நகர சபை உறுப்பினருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.


இதனையடுத்து பொலீஸ் நிலையம் சென்ற புத்தளம் நகர சபை உறுப்பினர் தில்சான் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இன்று அவரை புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான  கமர்தீன்,ரம்சீன்,அசீம் மற்றும் சிராஜ் முஹம்மத் சஜாத் மன்றில் தமது தரப்பவாதி சார்பில் சுமார் ஒரு மணித்தியாலயங்கள் இந்த கைது பிழையானது என்பதை வாதிட்டனர்.

இதனையடுத்து சரீரப் பிணை வழங்கிய நீதவானட,கடவுச் சீட்டினை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பில் சட்டத்தரணி சிராஜ் முஹம்மத் சாஜித் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் 

பாராளுமன்ற உறுப்பினர் சின்தக மாயாதுன்னவின் முறைப்பாடு தொடர்பில் பொலீஸ் நிலையம் வரவழைக்கப்பட்ட புத்தளம் நகர சபை உறுப்பினர் தில்சான் கைது செய்யப்பட்டார்.நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.இவரின் சார்பில் மன்றில் கருத்துக்களை முன் வைத்தோம்.

இவர் கைது செய்யப்பட்டதன் பிற்பாடு,இருவாரங்களுக்கு முன்னர் சேதமாக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீமின் வீடு மற்றும் அலுவலக சம்பவத்துடன் தில்சான் புகார் செய்யப்பட்டு இந்த வழக்குடன் இணைக்கப்பட்டதானது ஒரு திட்டமிடப்பட்ட ஏற்பாடாகவே தெரிகின்றது.இந்த சம்பவங்களுடன் தில்சானுக்கு தொடர்புபட்டமைக்கான ஆதாரங்கள் உரிய முறையில் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியதாகவும் இதனையடுத்து மன்று இவருக்கான பிமைணயினை வழங்கியதாகவும் அவர் மேலும் கூறினார்.


No comments

Powered by Blogger.