Header Ads



இந்த மாதம் அதிக எண்ணிக்கையிலான அரசியல்வாதிகளை உள்ளே அனுப்புவோம்


இந்த மாதம் அதிக எண்ணிக்கையிலான அரசியல்வாதிகளை உள்ளே அனுப்புவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார தெரிவித்துள்ளார்.


மக்கள் சந்திப்பொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


நாட்டின் அதிக எண்ணிக்கையிலான அரசியல்வாதிகளை, இந்த மாதத்திற்குள் சிறைக்கு அனுப்புவோம் என அவர் தெரிவித்துள்ளார்.


மாற்றம் செய்யப்பட வேண்டிய அரசாங்க அதிகாரிகள் இந்த மாதத்திற்குள் மாற்றப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


வட மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் கடந்த அரசாங்கங்களில் பதவி வகித்த அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் தற்பொழுது கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


நாம் இதை செய்யாவிட்டால் நாட்டை திருத்த முடியாது என்பதை அனைவரும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.


இந்த மாதத்திற்குள் அரச இயந்திரத்தில் மாற்றம் ஏற்படும் என்பதுடன் அதிக எண்ணிக்கையிலான அரசியல்வாதிகள் சிறைக்குச் செல்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.