Header Ads



காணாமல் போயிருந்த ஆயிஷா ஜனாஸாவாக மீட்பு - அட்டுலுகம முழுவதும் சோகம்


பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் நேற்று (27) காலை காணாமல் போன சிறுமியின் ஜனாஸா,  அட்டுலுகம பிரதேசத்திலுள்ள வயல் ஒன்றுக்கு அருகில் இருந்து சற்று முன்னர் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டுலுகம அலுகஸ்ஸாலி வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை 10.15 மணியளவில் தனது வீட்டில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள கடையொன்றில் கோழி இறைச்சி வாங்கச் சென்ற போதே சிறுமி காணாமல் போயிருந்தார்.

குழந்தைக்கு உயர்தரமான சுவனமும், அவரது பெற்றோருக்கு ஆறுதலும் கிடைக்க பிரார்த்திப்போம்.



1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    காணாமல் போன சிறுமி ஜனாஷாவாக மீட்பு ஏதோ ஒருவகையில் கொலை நடந்து இருக்கிறது இதை செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை நீதிமன்றம் கொடுக்கும் அதை இந்த நாட்டு மக்களும் எதிர்பார்கிறார்கள் ஆனால் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இந்த கொலைகாற நாய்களுக்கு பொது மன்னிப்பு ஜனாதிபதி மன்னிப்பு என்று மன்னிப்பு கொடுப்பார்கள் அவர்களின் மகளுக்கு இப்படி நடந்தால் மன்னிப்பு கொடுப்பார்களா?
    இதனால்தான் இஸ்லாமிய சட்டம் சொல்கிறது பாதிக்கப்பட்ட வர்களின் பொறுப்புவாய்ந்த உறவினர்கள் மன்னிப்பு கொடுக்காதவரை மன்னிப்பு இல்லை நிதி மன்ற தீர்ப்பான மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.
    இன்று இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் விரும்புவது இந்த சிறிமியை கொன்றவனை தூக்கில் போட வேண்டும் அதுதான் நியாயமும் ஆனால் காலம் கடந்தவுடன் எல்லாம் தலைகீழாகவே போகிறது.இதுபோன்ற எத்தனை சம்பவங்கள் இந்த நாட்டில் நடந்துள்ளது,கடைசியில் கருணை காட்டுவார்களாம் இந்த பிஞ்சு சிறுமிக்கு யார் கருணை காட்டுவது அவளின் பெற்றோரின் மனநிலை என்ன அதற்கு யார் பதில் சொல்வது.
    குற்றவாழி யாராக இருந்தாலும் கூடிய சீக்கிரம் மரண தண்டனை கொடுக்க வேண்டும்.இது என்னுடைய மட்டுமல்ல மனித நேயம் உள்ள பல கோடி மக்களின் எதார்பார்ப்பு,
    பொறுத்து இருந்து பார்ப்போம் குற்றவாழிகள் கைது செய்யபடட்டும்.
    எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த பெற்றோருக்கு மேலான பொறுமையை கொடுப்பானாக மன அமைதியை கொடுப்பானக அந்த சிறுமியை மேலான ஜன்னதீதுல் பிர்தௌசில் நுளையச் செய்வானாக குற்றவாளிகளை கூடிய சீக்கிரம் கண்டு பிடிக்க பொலிசாருக்கு அல்லாஹ் உதவி செய்வானாக.ஆமீன்
    JAWFER ,JP

    ReplyDelete

Powered by Blogger.