Header Ads



வண்ணத்தவில் வெடி பொருட்கள் மீட்பு - நீதிமன்றத்தில் இன்று நடந்தவை

 


புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா

வண்ணத்தவில் லெசக்டோ தோட்ட வெடி பொருட்கள் மீட்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (30) புத்தளம் உயர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர்களின் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூன்மாதம் 3 தினங்கள் தொடராக விசாரணை செய்வதென மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினர் அறிவித்தனர்.

2019 ஆம் ஆண்டு  வண்ணத்தவில்லு பகுதியில்  வைத்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பிலான சந்தேக நபர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 3 வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் இவர்களின் வழக்கு விசாரணைகள் இன்று புத்தளம் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

முதலாவது மற்றும் இரண்டாவது, சந்தேக நபர்களான முஹம்மத் முபீஸ்,முஹம்மத் ஹமாஸ் ஆகியோரின்  சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தமது தரப்பு வாதிகளின் கைது மற்றும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் போதுமான ஆதரங்களை கொண்டிருக்கவில்லை என்பதுடன்,தற்போதைய புதிய திருத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரிவுகளுக்கு அமைய சிறைவாச காலம்   12 மாதங்களுக்கு மேற்படும் பட்சத்தில் சந்தேக நபர் சிறைப்படுத்ப்பட்டோ அல்லது விசாரணைகளின் பேரில் தடுத்து வைக்கப்பட்டோ இருப்பாராயின் அவருக்கு விசேட நியமத்தின் கீழ் பிணை வழங்குவது ஏற்புடையதாகும் என்பதினாலும்,இது தொடர்பில் நீதி அரசர்கள் தமது கவனத்தை செலுத்தி் மேற்குறிப்பிட்ட சந்தேக நபர்களின் பிணை வழங்கள் தொடர்பில் ஆவணம் செய்யுமாறு மன்றில் வேண்டுகோளினை முன் வைத்தார்.

இது தொடர்பில் மன்றில் ஆஜராகி இருந்த அரச தரப்பு பிரதி சொலிட்டர் ஜெனரல் மேற்படி பிணை தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்துக்களை முன் வைக்க தனக்கு போதமான காலத்தை வழங்க வேண்டும் என்று நீதிபதிகளிடத்தில் முன் வைத்த வேண்டுகோளுக்கமைய இந்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் தொடராக மூன்று தினங்களுக்கு எடுத்துக் கொள்வதென மூவரடங்கிய நீதிபதிகள் இதன் போது அறிவித்தனர்.

இதே வேளை  ஜூன் மாதம் ஒன்பதாம் திகதி பிரதான விசாரணை அதிகாரியினையும் தவறாது மன்றில் ஆஜராகவேண்டுமென்றும் இதன் போது நீதவான்கள் திறந்த நீதிமன்றில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.