Header Ads



திரிபோஷா உற்பத்தி நிறுத்திவைப்பு


திரிபோஷா உற்பத்தி நிறுத்தி வை்ககப்பட்டிருந்தாலும், களஞ்சியத்தில் சேமிக்கப்பட்டுள்ள திரிபோஷாவை உடனடியாக விநியோகிப்பதற்கு ஜா-எல திரிபோஷா தொழிற்சாலையின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார்.

எனினும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு திரிபோஷா விநியோகம் முறையாக நடைபெறுவதில்லை என அரச குடும்ப நல சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

சில சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு கடந்த பெப்பிரவரி மாதத்தின் பின்னர் திரிபோஷா இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் திரிபோஷாவிற்கு விநியோகத்திற்கு காணப்பட்ட கேள்வி அறிவிப்பு தொடர்பில் காணப்பட்ட பிரச்சினை காரணமாக திரிபோஷா உற்பத்தி சில வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டதாக ஜா-எல திரிபோஷா தொழிற்சாலையில் தலைவர் தெரிவித்துள்ளார்.

மே மாதத்தின் முதல் வாரத்தில் மக்காச் சோளத்திற்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டமையை தொடர்ந்து ஒரு கிலோகிராம் 55 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் திரிபோஷா நிறுவனம் கேள்வி அறிவித்தலுக்கு அமைய ஒரு கிலோகிராம் சோளத்தை 58 ரூபாய்க்கு கெள்வனவு செய்வதற்கு தீர்மானித்திருந்தது.

எனினும் நிர்ணய விலைக்கு பின்னர் புதிய கேள்வி அறிவித்தலை விடுத்து அதற்கமைய செயற்பட தீர்மானித்தது.

இதற்கு சில காலம் தேவைப்பட்டமையே திரிபோஷா உற்பத்தி தாமதத்திற்கான காரணமாக அமைந்தது என தொழிற்சாலையின் தலைவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.