Header Ads



முஸ்லிம் கலாசார திணைக்களத்திற்கு அன்பு வேண்டுகோள் - உம்றா பணத்தை திருப்பி வாங்கித் தாருங்கள்


கொரோனா வைரஸ்ஸினால் எமது முஸ்லிம் சமுகம் பல இன்னல்களை அனுபவித்து கொண்டிருப்பதை நீங்கள்அறீவீர்கள். அவற்றில் ஒரு அங்கமாக ஹஜ் உம்றா ஏஜென்சிகளின் ஏமாற்றுதல்களும், போலி வாக்குறுதிகளும்அடங்கும்.

சில உம்றா ஏஜென்சிகள் கொரோனா வைரஸ்ஸுக்கு முதல் பல அப்பாவி மக்களிடம் புனித நோன்பு காலத்தில் உம்றாவுக்கு அழைத்து செல்வதாக கூறி, முற்பணத்தை பெற்றுவிட்டு சவுதி அரசு உம்றாவை கொரோனா காரணமாக தடை செய்த போது, அப்பணத்தை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றிக்கொண்டு உள்ளனர். 

இவர்களது இந்த ஏமாற்றத்தை சட்டத்துக்கு முன் தகுந்த ஆதாரத்துடன் கொண்டு வந்து, நஸ்ட ஈடுபெறுவது ( அல்லாஹ்வின்துணையோடு) மிகவும் இலகுவான விடயம்.

ஆனால் அந்நிய சமூதாயம் மத்தியில் எமது சமூகம் பற்றி தப்பபிப்ராயம்வரக்கூடாது என்பதே எம் மனதில் முன் வந்து போகின்றது. ஏற்கனவே, எமது அரசு ஹஜ் உம்றா கடமையை தாமாகவே ஒழுங்கு செய்வதற்கான யோசனையை கொண்டிரிந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். 

எனவே, இப்பிரச்சினையை எமது சமூதாயம் பாதிக்கப்படாதவாறு சுமூகமாக தீர்த்து தருமாறு மிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: நன்மை கருதி ஹஜ் உம்றா ஏஜென்சியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதை அறியத்தறுகின்றோம். தேவையேற்படின் முழு விபரங்களும் ஆதாரங்களுடன் வெளியிடப்படும்.

மொஹமட் பசான்

No comments

Powered by Blogger.