Header Ads



கட்டாரிலிருந்து தூதரகம் மூலம் இலங்கைக்கு வந்தது எப்படி என விளக்கும் ஓர் நண்பரின் பதிவு...


கட்டாரிலிருந்து தூதரகம் மூலம் இலங்கைக்கு சென்றது எப்படி என்பதை விளக்கும் ஓர் இலங்கை நண்பரின் பதிவு...

நிறைய பேர் உள்பெட்டியில் வந்து உங்கட அனுபவத்தையும் ஊருக்கு போறதுக்காக எப்படி Apply பண்ணினீங்க என்டு எல்லாம் கேட்டாங்க . ஒவ்வொருத்தரா சொல்றத விட போஸ்டா போட்டா நிறைய பேர் பயன் பெறுவாங்க என்டு இந்த போஸ்ட போடுறேன்.

lankaembassyq70@gmail.com இது தான் இலங்கை தூதரகத்துட மெயில் அட்ரஸ் இதுக்கு உங்கட Details எல்லாம் மெயில் பண்ணுங்க . முக்கியமா உங்கட மொபைல் நம்பர், இப்ப வேல செஞ்சிட்டு இருக்கீங்களா இல்லையா அதெல்லாம் சேர்த்து மெயில் போட்டு விடுங்க .. ரிப்லே ஒன்னும் வர இல்ல என்டா 2,3 தடவ மெயில் பண்ணுங்க முக்கியமா Embassy ஆல நீங்க வேல இல்லாம கஷ்டப்படுறவங்களா இருந்தா தான் உடனே அனுப்ப பார்ப்பாங்க .. அப்டி இல்லாதவங்க கொஞ்சம் பொறுமையா இருங்க எம்பெசியாலயே கோல் பண்ணுவாங்க உங்க மெயில பாத்துட்டு .

#Doha_To_Colombo 26.05.2020

10.30 ப்லைட்டுக்கு 6 மணிக்கு எல்லாம் வர சொல்லிட்டாங்க எயார்போர்ட்டுக்கு போனா பயணம் செய்றவர தவிர வேற யாரும் உள்ள போக முடியாதுனு சொல்லிட்டாங்க .. அதனால நா மட்டும் உள்ள போனேன் .. ஏற்கனவே எங்களுக்கு டோக்கன் நம்பர் தந்து இருந்தாங்க அது படி ஒவ்வொருத்தரா டெம்பரேச்சர் எல்லாம் செக் பண்ணி போர்டிங் பாஸ் எல்லாம் தந்தான் .. எல்லாம் சரியாகி ப்லைட்டுக்க போனா எப்பவும் போல தான் வச்சி இருந்தான் தொடுவா பஸ் மாதிரி. நானும் சமூக இடைவெளி எல்லாம் பேணி கேப் விட்டு தான் வைப்பான் என்டு பார்த்தேன் ஆனா அப்டி வைக்கல .. 10.30 கொஞ்சம் தாமதம் ஆக்கி 10.45 எடுத்தான் . விமானம் புறப்பட்டு சரியா இலங்கை நேரப்படி 05.45 க்கு இறக்கினான் .. அதுல இருந்து ஒவ்வொருத்தனா எடுத்து செக் பண்ணி கை , Shoe ல எல்லாம் Sanitizer அடிச்சான் நம்மட Hand luggageக்கு கூட Sanitizer அடிச்சிட்டு பழைய mask, Gloves எல்லாம் வீசிட்டு புதுசு தந்தான் . அப்றமா கமரா எல்லாம் வச்சி நம்ம உடம்புட டெம்பரேச்சர் எல்லாம் பாத்தான் .. அதுக்கு அப்றம் காலை சாப்பாடு (நல்லா இருந்தது) அப்றமா இனி எல்லாத்தையும் க்ளியர் பண்ணி டோகன் தந்தான் அது படி நம்மட Baggage எல்லாம் வாங்கி லொரி ஒன்டுல ஏத்தினான் .

7,8 சொகுசு Bus la எல்லாரையும் ஏத்தினான் ஏறி உக்கார்ந்தா சிங்கள நொன்ஸ்டப் பாட்டு போட்டு வவுனியா கொழும்பு பஸ் மாதிரி இருந்திச்சி . எந்த கேம்ப் என்டு ஒரு ஆர்மிட்ட கேட்டேன் . அம்பாற என்டான் . லொகேசன ஓன் பண்ணி எவ்வளவு நேரம் போகும்னு பார்த்தா 6 மணித்தியாலம் என்டு காட்டுச்சி அவ்வளவு நேரம் பசியோட இருக்க கஷ்டமே என்டு சொன்னேன் .. “ஒயா கிஹில்லா வாடிவென்ன ஒக்கோடம தென் கேம தெனவா என்டான்.” சொன்ன மாதிரியே பகல் சாப்பாடு மக்கள் Favorite பருப்பும் , மீனும் ,சம்பலும் வச்சி இருந்துச்சி... (சாப்பாடு வேற லெவல் 👌👌) சாப்டு முடிச்சி இனி பஸ் புறப்பட்டது . எங்கட பஸ்ஸுக்கு முன்னாடி 2 டிபன்டர் , Siren வச்ச பொலிஸ் கார் 2 என்டு பாதுகாப்போட போனோம் .. ஈசியான வழியால போவாம எங்க எங்கயோ சுத்தி 8 மணித்தியாலத்துக்கு பிறகு அம்பாற கேம்ப்ல கொண்டு வந்து சேர்த்தான்.

கேம்ப் எப்டி என்டு அடுத்த போஸ்ட்ல சொல்றேன் ..

Sri Lankan Community Development Forum - Qatar

No comments

Powered by Blogger.