சகாத் நிதியிலிருந்து முஸ்லிம்கள், செய்துள்ள நெகிழ்வூட்டும் செயல் - சிவசேனையின் தலைவரும் பாராட்டு
மும்பையிலிருந்து 380 கிமீ தொலைவிலுள்ள இசால்கராஞ்சி எனும் ஊரில் வசிக்கும் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அருகிலுள்ள இந்திராகாந்தி நினைவு மருத்துவமனைக்கு ரூ 36 லட்சம் செலவில் 10 படுக்கை வசதி கொண்ட அவசர சிகிச்சை பிரிவை தானமாக வழங்கியுள்ளார்கள்
ரமலான் மாதத்தில் முஸ்லிம்களிடத்தில் திரட்டப்பட்ட ஜகாத் நிதியிலிருந்து இந்த வசதியினை முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது
ரம்ஜான் தினத்தன்று ICU பிரிவை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்து பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே ஆண்டு வருமானத்தில் 2.5% நிதியை தானமாக செய்து ICU வசதியினை செய்துள்ளதன் மூலம் இந்திய நாட்டு மக்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை முஸ்லிம்கள் தந்திருப்பதாக பாராட்டியுள்ளார்.
மேலும் பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணத்தை முஸ்லிம்கள் வழங்கியுள்ளதாக கூறினார்.
மூன்று லட்சம் மக்கள் தொகையினை உடைய இந்த ஊரில் அவசர சிகிச்சைக்காக தொலைதூரம் செல்ல வேண்டியுள்ளதால் அவ்வூரின் மக்கள் தொகையில் வெறும் 15% மக்கள் தொகையை கொண்டுள்ள முஸ்லிம்கள் ஒன்றிணைந்து இந்த வசதியை செய்து கொடுத்துள்ளார்கள்.
சமஸ்ட் முஸ்லிம் சமாஜ் என்ற இஸ்லாமிய கூட்டமைப்பு செய்துள்ள உதவியை Dr ஜாவித் பக்வன் (அறுவை சிகிச்சை நிபுணர் IGM மருத்துவமனை) அவர்கள் இது போன்று நிகழ்வை தாம் வேறெங்கும் கண்டதில்லை என நெகிழ்ந்துள்ளார்.
முதலில் பல கருத்து வேறுபாடுகள் எழுந்தாலும் பின்பு ரமலானுடைய பரிசாக இதை விட சிறந்தது இருக்க முடியாது என்று முடிவு செய்து இவ்வுதவியை செய்ததாக சமஸ்ட் முஸ்லிம் அமைப்பின் உறுப்பினர் நதீம் அஹ்மத் தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் மகாராஷ்டிர மாநிலத்தில் முஸ்லிம்களின் இந்த சேவை மிகவும் இன்றியமையாததாக அமைந்து விட்டது என்றே சொல்லலாம்.
நன்றி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
செய்தி மொழியாக்கம் : YMJ Media

அவர்கள் செய்வார்கள். ஆனால் காவிகள் அவர்களது உடமைகளுக்குத் தீ மூட்டி அவர்களையும் நைய்யப் புதைப்பார்கள். இதுதான் காவிகளது கைம்மாறு????
ReplyDelete