Header Ads



ரணில் - சஜித் தரப்பு, மீண்டும் இணைந்து போட்டியிடுவார்களா.??

அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டு, தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டால், தற்போது இரண்டு தரப்பாக பிரிந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியினர் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் விருப்பத்துடன் இருந்து வருவதாக தெரியவருகிறது.

பொதுத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என பிரிந்து வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பகினர்கள் இவ்வாறு இணைந்து செயற்படுவது குறித்த கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

இந்த இரண்டு தரப்பினரும் ஏற்கனவே பொது விடயங்களில் இணைந்து செயற்படும் விதத்தை காணக் கூடியதாக உள்ளது.

ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பினரும் இணைந்து செயற்பட்டனர்.

அத்துடன் ஊரடங்குச் சட்டத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டமை உட்பட சில சம்பவங்கள் குறித்து இருத்தரப்பு பிரதிநிதிகள் இணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

எவ்வாறாயினும் மீண்டும் இணையவது தொடர்பாக இரண்டு தரப்பிலும் இதுவரை உத்தியோகபூர்வமாக கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணைகள் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த 18 ஆம் திகதி ஆரம்பித்த விசாரணைகள் இன்றும் நடைபெற்றதுடன் நாளைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.