Header Ads



தேவையுடைய மக்களுக்கான பெருநாள் ஆடைகளை வழங்கும் திட்டம்


றிஸாலா அமைப்பினால் HANDS FOR FESTIVAL  எனும் தேவையுடைய மக்களுக்கான பெருநாள் ஆடைகளை வழங்கும் திட்டம் மிக வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்துள்ளது.

 அல்ஹம்துலில்லாஹ்!!

Risala Free Textiles எனும் இலவச ஆடையக செயற்திட்டத்தை நனவாக்கிய தோடு, இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இதற்கான வாழ்த்துக்களும், நன்றிகளும்  வந்தடைந்து எம்மை உத்வேகப்படுத்தியதோடு,  எமதூர் பற்றிய நல்லபிப்பிராயமும் இதன் மூலமாக ஏற்பட்டுள்ளது என்பதனை எண்ணி மகிழ்கின்றோம்.

 Risala வின் இத்திட்டம் நாடு பூராகவும் ஏனைய இன மதத்தவர்களிடம் முஸ்லிம்கள் பற்றிய நல் அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, ஊருக்கான ஒரு தனி பெயரினை எடுத்து தந்துள்ளது.

சுமார் எமது பிரதேசத்தை சேர்ந்த 350 குடும்பங்களிலிருந்து சுமார் 2200  பேர்கள் இவ்வருடம் பெருநாளுக்கான புத்தாடைகளை வழங்கியுள்ளோம் என்பதனை எமது ஆதரவாளர்களுக்கு பெருமிதத்தோடு தெரிவித்துக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பெருநாளை வசதி படைத்தவர்கள் போன்று கொண்டாட முடியாமல் போகலாம் என்று எண்ணியிருந்த ஏழை மக்களின் துயரை இதன் மூலம் துடைத்து எறிந்துள்ளோம்.

குழந்தைகளுக்கு ஆடைகளை பெற்றுச் செல்லும் போது அவர்களில் கண்ணிலிருந்த ஆனந்தத்தையும் ,சிலரின் கண்களில் ஆனந்தக்கண்ணீர் படிந்ததையும் எண்ணிப்பார்த்து இத்திட்டம் எவ்வளவு தூரம் இச்சமூகத்தின் தேவையாய் இருந்துள்ளது என்பதனை உணர்ந்தோம்.

ஆயிரம் பேர், ஆயிரம் விதமாக விமர்சித்தாலும் மிகச்சிறந்த திட்டம் ஒன்றினை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்துள்ளோம் என்பதனை பெருமையோடு தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதற்காக வாரி வழங்கிய எமதூர் மக்கள், எமது ஊரிலுள்ள ஆடையக உரிமையாளர்கள் (Nimran Tex, Hasan Tex, Dress Line, Fazeel Textiles) அனைவர்களுக்கும் உள்ளார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இத்திட்டத்தின் வெற்றி விமர்சன நிலையிலும், தன்னிறைவிலும்  இருப்பவர்களுக்கு விளங்கிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அடிமட்ட மக்களிடம் இத்திட்டம் வெற்றிகரமாக அவர்களின் தேவையை நிவர்த்தி செய்துள்ளது.

இதற்கென முழுமையாக கடந்த 10 நாட்களாக இரவு பகலாக ஆடையகத்தில் தங்களை அர்ப்பணித்த எமது உறுப்பினர்களுக்கும், மறைமுகமாக ஆதரவளித்த எமது ஆதரவாளர்களுக்கும், பண உதவிகளையும், ஆடைகளையும் தந்துதவிய  பெருந்தகைகளுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.
 جزاكم الله خيرا 

ஏழை மக்களின் துயர் துடைக்கும் இச் செயற்திட்டம் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் செய்வதென உறுதி பூண்டுள்ளோம்.

எனவே எமதூர் மக்கள் இம்முறை இதற்கு ஆதரவளித்ததைப் போன்று தொடர்ந்தும் எம்மோடு இணைந்து செயற்பட்டு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம்.

 "அனைத்தும் இறைவனின் திருப்பொருத்தத்திற்காகவே"

ஊடகப்பிரிவு
றிஸாலா அமைப்பு,
நிந்தவூர்.

1 comment:

  1. May Almighty accept all your hardship and shower mercy and Baraka for you and your families.it us a great help at this point of time. Srilankans are famous all over world for generosity.

    ReplyDelete

Powered by Blogger.