Header Ads



பாதுகாப்பு பிரச்சினை என்றால், ஆடைகளை கழற்ற வேண்டும் - தம்பர அமில தேரர்

நாட்டின் சமூக முறையின் கீழ் இனவாதம் வர்த்தக பொருளாக மாறியுள்ளதாக தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் அதிகாரத்திற்கு வருவதற்காக இனவாதத்தை சந்தைப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம், கத்தோலிக்க, இந்து மக்கள் உடனடியாக முன்னோக்கி வர வேண்டும்.

அடையாளத்தை இல்லாமல் செய்ய வேண்டாம். பாதுகாப்பு பிரச்சினை என்றால் ஆடைகளை கழற்ற வேண்டும். அதனை மத அடையாளமாக அர்த்தப்படுவத்துவது தவறானது. அமைச்சர் மங்கள சமரவீர இலங்கை பௌத்த நாடு அல்ல என குறிப்பிட்டார்.

இவ்வாறான கருத்துக்கள் மூலம் மற்றவர்கள் வலுப்பெறுவார்கள் என்றால் அது பிரச்சினையில்லை. இப்படியான கருத்துக்களை கேட்பவர்கள் புத்திசாலித்தனமாக கேட்க வேண்டும்.துரதிஷ்டவசமாக இலங்கையில் அப்படி நடப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Pikkumaarhalil etthanai wahay...???
    Ithu ponru ullawarhalukku arinja widayam enayya pikkumaarahalukku puriyamaattiki...

    ReplyDelete
  2. நிச்சயமாக பாதுகாப்பு சம்பந்தமாக என்றால் ஆடைகளை களைந்து பார்க்கத்தான் வேண்டும், ஆனால் அதனை முன்னாள் பிரதமர் S.W.R.D. பண்டாரநாயக்க அவர்களின் கொலை முதல் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மீதான தற்கொலை குண்டு தாக்குதல், இப்போது இடம் பெற்ற கத்தோலிக்க தேவாலயங்கள் மீதான தற்கொலை தாக்குதல் வரை சீர் தூக்கி பார்த்து நடைமுறைப் படுத்த வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.