Header Ads



நீர்கொழும்பில் யாழ் - ஒஸ்மானியாவின், கல்வி அபிவிருத்தி மாநாடு


ஏற்கனவே தெரிவித்திருந்த படி யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டு வரும் கல்வித்துறை முன்னேற்றங்கள், உயர்தர வகுப்பு ஆரம்பிப்பதற்கான தேவைகள், கல்வி அபிவிருத்தித் திட்டங்கள் என்பன சம்பந்தமான கலந்துரையாடல் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 27.01. 2019  ஞாயிற்றுக் கிழமை அன்று நீர் கொழும்பு டிப்போ வீதியிலுள்ள நீர்கொழும்பு விஸ்டம் கல்லூரியில் மாலை 4 மணி முதல் இடம்பெறவுள்ளது. 

ஒஸ்மானியாக் கல்லூரியின் அதிபர் சேகு ராஜிதீன்  இங்கு முக்கிய உரையாற்றவுள்ளார். 1963 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் ஐந்தாயிரம் மாணவர்கள் ஒஸ்மானியாவில் கல்வி கற்று வெளியேறி வியாபாரத்திலும் தொழில்களிலும் முன்னேறி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் சுமார் 1200 பேர் நீர்கொழும்பு பலவத்துறை உள்ளிட்ட பிரதேசங்களிலும் மேலும் பலர் கொழும்பிலும்  சிலர் சிலாபத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நீர் கொழும்பில் இடம்பெறும்    கூட்டம் நீர்கொழும்பு பலவத்துறை மினுவான்கொட, வத்தளை, கொழும்பு மற்றும் சிலாபம் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கானது. 

எனவே நீர்கொழும்பு பலவத்துறை மினுவான்கொட, வத்தளை, கொழும்பு மற்றும் சிலாபம் பிரதேசங்களைச் சேர்ந்த ஒஸ்மானியாவின் பழைய  முன்னை நாள் மாணவர்கள் மற்றும் ஏனைய பாடசாலைகளில் கற்றிருந்தாலும் சமூகத்தில் அக்கறையுள்ளவர்கள் போன்ற அனைவரையும் நீர்கொழும்பு கூட்டத்தில் கலந்து சிறப்பிக்குமாறு அதிபர் அவர்கள் அன்புடன் கேட்டுக் கொள்கின்றார். 

மேலதிக தகவல்களுக்கு ஹில்மி 0777622754  நவாஸ் 0777129233 மற்றும் இர்ஷாத் 0777192883 ஆகியோரைத் தொடர்புகொள்ளுமாறு தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றோம்.  

புத்தளம் அனுராதபுர போன்ற இடங்களில் வாழும் ஒஸ்மானியாவின் முன்னாள் மாணவர்களுடான கலந்துரையாடல் புத்தளத்தில் வேறு ஒரு தினத்தில்  இன்ஷா அல்லாஹ் இடம்பெறும்.



No comments

Powered by Blogger.