Header Ads



நாட்டின் உறுதி நிலையை ஏற்படுத்தவே, மகிந்த பிரதமர் பதவியிலிருந்து விலகவுள்ளார்


மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள், பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, நாளை  பதவியில் இருந்து விலகவுள்ளார்.

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய விட்டு, மகிந்த ராஜபக்ச நாளை பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அறிவித்துள்ளார்.

நாட்டின் உறுதி நிலையை உறுதிப்படுத்துவதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று, நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் மனு மீது இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க  உச்சநீதிமன்றம், இன்று மாலை மறுத்ததை அடுத்து, சிறிலங்கா அதிபர் செயலகத்துக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச அங்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. பிரதமர் ஆனதும் நாட்டு நலனுக்காக!
    ராஜினாமா செய்யரதும் நாட்டு நலனுக்காக!!
    ஒன்றும் விளங்கவில்லை..

    ReplyDelete
  2. நாட்டை உறுதியற்ற நிலைக்கு கொண்டு போய் பாதாளத்திற்கு தள்ளியது இந்த தேசத்துரோகிதான். இது பதவி விலகல் அல்ல. நாட்டின் சட்டமும் மக்களும் உன்னை துரத்தி அடிக்கிறார்கள் .

    ReplyDelete
  3. We can't understand what he said

    ReplyDelete

Powered by Blogger.