Header Ads



ரணிலை ஆட்சிக்கு கொண்டுவரும் தேவை, வெளிநாட்டு தூதுவர்களுக்கு இருக்கின்றது.

பிரிவினைவாத, அடிப்படைவாத மற்றும் சமஷ்டி உட்பட பிரிவினைவாத கோரிக்கைகளுக்கு இணங்கியே ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று -14- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் மத்தியில் கொண்டு செல்லவிருந்த பிரச்சினை, மக்கள் நீதிமன்றத்திற்கு சென்று தீர்க்க எதிர்பார்த்திருந்த பிரச்சினையை நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் அலோசியஸின் பணத்திற்கு விற்கப்பட 118 பேர் இருக்கின்றனர். அலோசியஸின் பணத்திற்கு விற்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் இந்த நாடாளுமன்றத்தை, குரங்குகளை விட அங்குமிங்கும் தாவும் நபர்கள் இருக்கின்றனர்.

மக்கள் வழங்கிய தீர்ப்பு மாறாக வேறு திசை நோக்கி இட்டுச் செல்லும் இந்த நாடளுமன்றத்தை தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டுமா இல்லையா என்ற வழக்கை, மக்கள் மன்றத்தில் தீர்த்துக்கொள்ளும் தேவை எமக்கிருந்தது. மக்கள் நீதிமன்றமே அந்த வழக்கை விசாரிக்கக் கூடிய உரிய இடம். மக்களின் அரசுரிமை இருக்கும் இடம். மக்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டாம் என்றே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மக்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாது நான்கரை ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தில் 7 நீதியரசர்கள் தீர்ப்பாக உள்ளது. விற்பனை செய்யப்பட்ட நாடாளுமன்றத்தை மாற்ற மக்களுக்கு இருந்த அரசுரிமை இல்லாமல் போயுள்ளது.

இந்த வழக்கில் மற்றுமொரு விடயம் தெளிவாகியுள்ளது. நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை திருத்த முயற்சித்த நேரங்களில், அதனை திருத்த வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்திலும் சர்வஜன வாக்கெடுப்பிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

எனினும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்ட திருத்தம் அல்ல. 19வது திருத்தச் சட்டத்தில் நான்கரை ஆண்டுகள் செல்லும் வரை நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என இந்த வழக்கு தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் விருப்பதுடன் நிறைவேற்றப்பட வேண்டிய திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று கூறுபவர்களே மூடிமறைத்து இந்த திருத்தத்தை மேற்கொண்டுள்ளனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் இருந்த மக்களின் உரிமையை கொள்ளையிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணியை ஏற்படுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான அசுத்தமான கூட்டணியுடனே ரணில் தனது அடுத்த கட்ட அரசியலை தெரிவு செய்ய உள்ளார்.

தமிழ் பிரிவினைவாத கோரிக்கைகளை ஏற்றிருந்தால், மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை பெற்றுக்கு கொள்வது இலகுவாக இருந்திருக்கும். அடிப்படைவாத கோரிக்கைகளை ஏற்று சமஷ்டி தீர்வை தருகிறேன். பிரிவினைவாத கோரிக்கைகளை ஏற்கிறேன் என மகிந்த ராஜபக்ச கூறியிருந்தால், அவருக்கு 113 பெரும்பான்மை பெறுவது பெரிய காரியமாக இருந்திருக்காது.

மகிந்த ராஜபக்ச செய்யாதையே ரணில் விக்ரமசிங்க செய்கிறார். பிரிவினைவாத, அடிப்படைவாத மற்றும் சமஷ்டி உட்பட பிரிவினைவாத கோரிக்கைகளுக்கு இணங்கியே ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை பெற்றுக்கொண்டார். இப்படியான ஒருவர் நாட்டின் பொறுப்பான பதவி வருவது நாட்டை மேலும் மோசமான நிலைமைக்கு கொண்டு செல்லும்.

ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டு வரும் தேவை வெளிநாட்டு தூதுவர்களுக்கு இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் கொண்டு வரும் தேவை இருக்கின்றது எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.f

4 comments:

  1. ஏ மிஸ்டர் வீரை ஏன் புதுமை பித்தன் போன்று கதைத்துக் கொண்டிருக்கின்றாய் குள்ளநரி ரனில் பௌத்தமத பெரும்பான்மை மக்களை திருப்தி படு்த்த சமீப காலத்தில் சிருபான்மைக் கெதிரான அநியாயங்களைகூட கண்டுகொள்ளவில்லை எவ்வாறு நீ இங்கு பொய்யாக அலங்கரித்து சொல்லும் இந்தவிடயங்களை ரனில் செய்யப்போகுன்றான்!

    ReplyDelete
  2. உன்னுடைய மோட்டு My3 யே தெளிவாகவே சொல்லி விட்டார் ஏன் MR இனால் பெரும் பான்மையை பெற முடியவில்லை என்று. அதற்குள் இந்த loudspeaker சும்மா ஏதோ இல்லாத ஒன்றை உழரித்தல்லுது.

    ReplyDelete
  3. unakku pidikkum pitthu ini....waut and see baba...un kaalam ini siraiyilthaan mudiyappohuthu..nee senja kullatthanam innum konja kaalam..moottaya kattungo

    ReplyDelete
  4. This modawansa always talks rubbish. These people are cardboard champions.

    ReplyDelete

Powered by Blogger.