Header Ads



இரகசிய தொடர்பாளராக, சுமந்திரன் செயற்படுகின்றார்

ஐக்கிய தேசிய கட்சிக்காகவும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இரகசிய தொடர்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் செயற்படுகின்றார் என்று சுசில் பிரேமஜயந்த குற்றம் சாட்டப்பட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பேசிய அவர், கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் திகதி அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால் அதை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்த்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அந்த ஆவணங்களை மொழிபெயர்த்து 7 ஆம் திகதி காலை சட்டமன்ற சபையில் சமர்ப்பித்ததாகவும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மேற்கத்திய நாடுகளை திருப்திப்படுத்தவே ஐக்கிய தேசியக் கட்சி இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சுசில் பிரேமஜயந்த குற்றம் சாட்டியுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை நடைபெற்றபோது நீதிமன்ற வழக்கை முன்னெடுத்ததும் சுமந்திரனே. கடிதம் வாயிலாக ரணில் அரசுக்கு ஆதரவு தெரிவித்ததும் சுமந்திரனின் முயற்சியே என்று சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரகசிய தொடர்பாளராக சுமந்திரன் செயற்படுகின்றார் என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. உங்கள் 60 கோடி கறுப்புப் பணத்துக்கு அடிபணியாமல் நேர்மையாகவும் துணிவாகவும் ரணில் விக்ரமசிங்கவையும் ஐ.தே.க. இணைக்க பாலமாக துணிவுடன் செயல்படுவது தவறா? கறுப்புபணத்தை கள்ளத்தனமாக கொடுப்பதாக வாக்குறுதியளித்து எம்பிக்களை உங்கள் பக்கம் பலாத்காரமாக இழுத்து எடுப்பது தவறா? பதிலை எதிர்பார்க்கின்றோம்.

    ReplyDelete
  2. பிரிவினைவாத சிந்தனைகொண்ட தமிழ் கூட்டமைப்பின் ஆதரவில் மிகப்பெரிய பின்னணி இல்லாமலிருக்க வாய்ப்பில்லை

    ReplyDelete

Powered by Blogger.