Header Ads



ஜனாதிபதியை நெருக்கடிக்குள் தள்ளக்கூடாது, என்பதாலேயே மஹிந்த இராஜினாமா

மஹிந்த இராஜினாமா செய்யும் வரையில் புதிய பிரதமரை ஜனாதிபதிக்கு நியமிக்க முடியாது- யாபா
மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் வரையில் புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் ஜனாதிபதியினால் நியமிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.

இன்று (14) மாலை மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இன்று உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை நீடித்ததன் காரணமாக அரசாங்கமொன்று செயற்பட முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் அரச துறைகளில் நிதிப் பிரச்சினையொன்று ஏற்பட வாய்ப்புள்ளது.

ஜனாதிபதியை நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது என்ற காரணத்தினாலேயே மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

1 comment:

  1. கட்சிகளுக்கு மட்டுமன்றி நாட்டுமக்களுக்கே ஆபத்தான இதுபோன்ற மூளைகெட்டவர்களை பெரும்பான்மைக் கட்சிகள் இனங்கண்டு கட்சிகளிலிருந்து துரட்சி பண்ணினாலன்றி பெரும்பான்மைக் கட்சிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கால்பத்திக்க முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.