Header Ads



நாடு முக்கியம், நபர்கள் அல்ல

மைத்திரி, மகிந்த, ரணில் ‌இம்மூவருக்குமான ஆதரவு, எதிர்ப்பு அல்லது‌ அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கான ஆதரவு,எதிர்ப்பு என்ற நிலையில் இருந்து ஒவ்வொருவரும் விடுபட்டு நாடு,சட்ட ஆட்சி,ஜனநாயகம்‌ சரியாக பேனப்படுதல்,ஒழுங்கானதும்,சட்டத்திற்குட்பட்டதுமான முன்மாதிரிகள் பின்பற்றப்பட வேண்டும் என்று சிந்திக்க வேண்டியதும்,செயற்பட‌ வேண்டியதுமான தருணம் இது.

ஜனாதிபதி மைத்திரி மகிந்தவை பிரதம ராக்கியதையும்,,

மகிந்தவை பிரதமராக்கி அமைச்சரவையை‌ நியமித்ததையும்,,

மூன்று முறை நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானித்ததை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்ததையும்,,

பாராளுமன்றத்தை கலைத்து,பொதுத் தேர்தலுக்கு திகதி நிர்ணயித்ததையும்,,
குறிப்பிட்ட ஒருவர் பெயர் குறிப்பிடப்பட்டு அதிபெரும்பான்மையல்ல முழுமையான ஆதரவு இருந்தாலும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என அறுதியிட்டுக் கூறுவதையும்,,

நியாயப்படுத்தும்,ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும்,

**எந்தக் கட்சியாக இருந்தாலும்,
**எத்தகைய சட்டமேதையாக இருந்தாலும்,
**எந்த ஊடகங்களாக அல்லது ஊடகவியலாளனாக இருந்தாலும்,
**எத்தகைய கலாநிதியாக அல்லது புத்திஜீவியாக இருந்தாலும்,
**எந்தப் பொதுமகனாக இருந்தாலும்

உங்களை ‌நோக்கி ஒரு சில கேள்விகள்

ஜனாதிபதியால் நடைமுறைப் படுத்தப்படும் மேற்கூறப்பட்ட அம்சங்களை நீங்கள் நியாயமானது என கருதினால் இந்த முன்மாதிரியை இனிவரும் ஜனாதிபதிகளும் தொடர்வார்களாயின் நிலைமை என்னவாகும்?

உங்களுக்கு இவை எல்லாம் சரியானதுதான் என்றால் இனிவரும் ஜனாதிபதிகளும் இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு செயற்பட்டால் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை கேள்விகுறியாகாதா?

பெரும்பான்மையை கருத்திற்கொள்ளாமல் எவரையும் பிரதமராக நியமித்துவிட்டு பாராளுமன்றம் அங்கீரிக்க‌ வேண்டும் என்பதும்
நியாயமானதுதானா?
இதனை முன்மாதிரியாக கொண்டு இனிவரும் ஒரு ஜனாதிபதியும் இவ்வாறு நியமித்தால் அப்போதும் ஏற்றுக் கொள்வீர்களா? ஆதரிப்பீர்களா?

பெரும்பான்மை ஆதரவைக் கொண்டு நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் நம்பிக்கை இல்லை என்று உதாசீனப்படுத்துவது சட்டவாக்கத்துறையை நிறைவேற்றுத்துறை மீறுவதாக அமைகின்றதல்லவா?

சட்டவாக்கத்துறையை நிறைவேற்றுத்துறை அத்துமீறுவதாகவும்,அதன் இயக்கத்தை முடக்குவதாகவும் அமையவில்லையா?

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவிநிலையில் குற்றம் புரிந்திருப்பாராயின் அவர்மீது உரிய நடவடிக்கையை உரிய முறையை பின்பற்றி எடுக்க வேண்டும் அல்லவா?

மாறாக ஒருவரது பெயரைக் குறுப்பிட்டு பாராளுமன்றத்தில் முழு உறுப்பினரும் ஆதரவு அளித்தாலும் நான் அவரை பிரதமராக்க மாட்டேன் என்று நிறைவேற்றுத்துறை கூறுமாயின் சட்டவாக்கத்துறையினதும் பெறுமதிதான் என்ன?

பாராளுமன்றம் நிறைவேற்றுத்துறையால் கேள்விக்குறியாக்கப்படவில்லையா?

முழுப்பாராளுமன்றமும் ஆதரவு அளித்தாலும் அதனை ஏற்க மாட்டேன் என்பது பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய உறுப்பினர்கள் அனைவரையும் தெரிவு செய்த நாட்டின் முழு வாக்காளர்களது தெரிவையும் நிராகரிக்கின்றல்லவா?

மக்களின் வாக்களிப்பு உதாசீனப்படுத்தப்பட்டு வாக்குரிமையின் பெறுமதி கேள்விக்குட்படுத்தப்படவில்லையா?

குறிப்பிட்ட ஒருவரோடு தன்னால் தனிப்பட்ட முறையில் சேர்ந்து இயங்க முடியாது எனவே அவரை பிரதமராக்க மாட்டேன் என்று நிறைவேற்றுத்துறை கூற முடியுமா?

ஒரு கட்சியில் ஒருவரது பெயர்கூறி அவரைத் தவிர வேறு யாருடைய பெயரையும்‌ பிரேரியுங்கள் பிரதமராக்குகின்றேன் என உத்தரவு இட நிறைவேற்றுத்துறைக்கு அதிகாரமுள்ளதா?

ஒரு கட்சியின் தீர்மானத்தில் தலையீடு செய்ய நிறைவேற்றுத்துறைக்கு அதிகாரமுள்ளதா?

இல்லையாயின் இது நிறைவேற்றுத்துறையின் அதிகாரமீறலும்,ஜனநாயக வரம்புமீறலுமல்லவா?

ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு மெல்ல மெல்ல நகர்ந்து செல்வது போல் இருப்பதை நீங்கள் உணரவில்லையா?

இறுதியாக நிறைவேற்றுத்துறையின் இன்றைய இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்துபவர்களே,ஆதரிப்பவர்களே,இவ்வாறான நடைமுறைகளை இனிவரும் ஒரு ஜனாதிபதி முன்மாதிரியாகக் கொண்டு செயற்படுவாராயின் அதைவிட ஒரு சர்வாதிகாரம் எதுவாக இருக்கும்,அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாக்கப்படும் போது ,நமது நாட்டின் பொருளாதார நிலைமை எங்கு செல்லும்?
எதிர்காலத்தில் சர்வதேசத்தில் நமது நாட்டின் அங்கீகாரம் எவ்வாறு இருக்கும்?

மைத்திரி,மகிந்த,ரணில் ஆதரவு எதிர்ப்பு,கட்சிகளின் ஆதரவாளன்,அங்கத்தவன் என்பதற்கு அப்பால் நிறைவேற்றுத்துறை,சட்டத்துறை,நீதித்துறை என்பன இந்த நாட்டில் சுதந்திரமாகவும்,ஒன்றை ஒன்று உரசிப்பார்க்காமலும், இந்த நாட்டின் இறைமையையும்,ஜனநாயகத்தை பாதுகாக்க இயங்க‌ வேண்டுமென்று சிந்திப்போம்.


1 comment:

  1. இந்த நாட்டில் இனவாதம், மதவாதம், மொழிவாதம், பிரதேசவாதம் தாண்டவமாடிய போதெல்லாம் இந்த சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை என்பன எவ்வாறு நடந்து கொண்டன என்பது உலகமே அறிந்த விடயம். இவை மூன்றும் இந்த நாட்டில் வாழும் சிறுபாண்மை மக்களுக்கு தனது கடமைகளை சரியாக, நேர்மையாக செய்யவில்லை. இவை மூன்றிலும் பேரினவாதம் துஸ்பிரயோகம் செய்து கொண்டிருந்தது. இப்போது இவை மூன்றும் தமக்குள் முட்டி மோதுகின்றன. இவை அனைத்தும் சரி செய்யப்படவேண்டும். அப்போதுதான் இந்த நாடு உருப்படும்.

    ReplyDelete

Powered by Blogger.