Header Ads



ஜனாதிபதி ஏற்படுத்திய நெருக்கடியை, அவரே முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

ஜனாதிபதி ஏற்படுத்திய நெருக்கடியை ஜனாதிபதியினாலேயே தீர்க்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை தொடர்வதை தடுக்க வேண்டுமாயின் ஜனாதிபதி தற்போதாவது தோல்வியை ஏற்று, அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளில் தோற்கடிக்கப்பட்டுள்ளதால், நாட்டில் பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவியில் இல்லை.

பெரும்பான்மை பலத்தை அங்கீகரித்து புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இன்று நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை கொண்டு நடத்திய தாக்குதலில் தனது தலையில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.