Header Ads



இன்று நள்ளிரவிலிருந்து, எரிபொருள் விலை குறைப்பு

பெற்றோல், டீசல் ஆகியவற்றின் விலை 5 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.

இன்று -15- நள்ளிரவிலிருந்து  இந்த விலை குறைப்பு  அமுல்படுத்தப்படுமென எரிபொருள் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இதுவரை 145 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 140 ரூபாயாகவும் 172 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 95  ரக பெற்றோல் 167 ருபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன் ஒ​ட்டோ டீசல் 116 ரூபாயிலிருந்து 111 ரூபாய் வரையும் சுப்பர் டீசல் 141 ரூபாயிலிருந்து 136 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சுக்கும் எரிபொருள் அமைச்சுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே இந்த விலை குறைப்பு குறித்து தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. emaatthu witthay.....2015 ku mun porunthum but ippo illa saamy.....petroliyattha wacche neenga arasiyal kondu ponawanga ...paamara makkaluku ippo wilakkam...ippowe doller prize high ..so eppudi kuraikkiringa etha kondu intha kadana moodapporinga...wilakkam illa unga arasiyal ippo..ithu potty illa engala kondu chess..wilaada..wait and see..naattuku nalla oruwan wendum new face...really thappundu solrawanga proof pannunga meadia moolam...courtsla engaluku no nambikkay sir......

    ReplyDelete

Powered by Blogger.