Header Ads



"பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த நாடும், இனி வீசா வழங்காது என்று நினைக்கின்றேன்"

பெரும்பான்மை பலம் உள்ளவர்களிடம் ஆட்சிப் பொறுப்பினை ஒப்படைப்பதே பொருத்தமானது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் ஏற்பட்ட அமளி நிலைமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு பல்வேறு இலகுவான வழிமுறைகள் உள்ளன.

குரல் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்துவதில் குழப்ப நிலைமை காணப்பட்டது.

எனினும், மஹிந்த ராஜபக்சவோ அல்லது வெறும் தரப்பினரோ பெரும்பான்மை பலம் யாரிடம் காணப்படுகின்றதோ அவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதே பொருத்தமானது என்பது எனது நிலைப்பாடாகும்.

யாருக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்பது இன்னமும் சரியான முறையில் நிரூபிக்கப்படவில்லை.

அது சபாநாயகரின் பிழையாகும், கேட்கவில்லை என்றால், இலத்திரனியல் முறையில் கைவிரல் அடையாள அடிப்படையில் இந்த வாக்கெடுப்பினை நடத்தியிருக்கலாம்.

ஆளும் கட்சியினர் அங்கு இங்கு சென்று குழப்பியிருந்தாலும், எதிராக எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பதனையேனும் துல்லியமாக கண்டறிந்திருக்கலாம்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் எந்தவொரு நாட்டிலும் இனி வீசா வழங்கப்படாது என்று நான் நினைக்கின்றேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் மிகவும் வருந்தக் கூடிய வகையில் அமைந்திருந்தது, இதனை பார்த்தால் எந்தவொரு நாடும் வீசா வழங்காது.

நாம் அதிகார மோகமுடையவர்களாக இருக்கக் கூடாது நாளம் ஆளம் கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் பெரும்பான்மை இருக்கும் பக்கத்திற்கு சந்தர்ந்தப்பம் வழங்கப்பட வேண்டும் என குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.