Header Ads



போலிப் பிரதமருக்கு 113 பேரின், ஆதரவு இல்லாததால் இழுத்தடிப்புகளில் ஈடுபடுகின்றனர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு போதியளவு அவகாசம் வழங்கும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சர்வகட்சி மாநாடு தொடர்பில் அவர் இவ்வாறு டுவிட்டர் மூலம் பதிவு இட்டுள்ளார்.

சர்வகட்சி மாநாட்டில் எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை அவர் குறிப்பிட்டுள்ளார்.

போலிப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத காரணத்தினால், இந்தப் பிரச்சினையை இழுத்தடிக்கும் முனைப்புக்களில் அரசாங்கத் தரப்பு ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல் குழப்ப நிலைமை வெட்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது அரசியல் இருப்பிற்காக இவ்வாறான அநீதியான செயற்பாடுகளல் மஹிந்த ஈடுபட்டு வருவதாகவும் அதற்காக அவர் வெட்கப்பட வேண்டுமெனவும் ஹர்ஷ டி சில்வா டுவிட்டர் ஊடாக பதிவு செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.