பாராளுமன்றத்தில் பங்கேற்பது பற்றி, நாளை தீர்மானிக்கப்படும் - மகிந்த அணி கூறுகிறது
நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துக்கொள்வதா இல்லை என்பது குறித்து ஆட்சியின் நாடாளுமன்றக் குழுவினர் கூடி இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை முற்பகல் 11 மணிக்கு கூடவுள்ளதாகவும் இது குறித்து இறுதி முடிவை எடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பந்துல குணவர்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Post a Comment