Header Ads



ஜனாதிபதி கொலைச் சதி - மக்களின் அனுதாபத்தைபெற்று வாக்குகளைப் பெறுவதே நோக்கம்

ஜனாதிபதியைக் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இவ்விடயம் தொடர்பில் சட்டத்துறை செயற்படும் முறை சந்தேகத்திற்கிடமானதாக உள்ளது என பொதுபலசேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பஸ்ஸரமுல்லே பஞ்சானந்த தேரர் தெரிவித்தார்.

மேலும் தேசிய அரசாங்கத்திற்கு 2020 இல் நடைபெறவுள்ள தேர்தல் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கு முற்படுவதாக மக்கள் மத்தியில் அனுதாபத்தைத் தோற்றுவித்து, வாக்குகளைப் பெற்றுக்கொள்வதே அவர்களின் நோக்கமாக உள்ளது என்றே எண்ண வேண்டியுள்ளது 

நாட்டில் பெரும்பான்மையானோர் சிங்கள பௌத்தர்கள் ஆவர். தற்போது நடைபெற்றுவரும் அனைத்து செயற்பாடுகளும் அவர்களுக்கு எதிரானதாகவே உள்ளன. இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக அனைத்து சிங்கள பௌத்தர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு  வீதியில் இறங்கினால் இந்த அரசாங்கம் வீட்டிற்குள் முடுங்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் எச்சரித்தார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபலசேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று -23- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2 comments:

  1. RAW paying for this kind of extremist organization in SL, so you are showing your Faith!

    ReplyDelete

Powered by Blogger.