தகாத வார்த்தைகளினால் திட்டி, நவீன் திஸாநாயக்கா என்னை தாக்க முயற்சித்தார் - திலங்க சுமதிபால
அமைச்சர் நவீன் திஸாநாயக்க தம்மை தாக்குவதற்கு முயற்சித்தார் என பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால குற்றம் சுமத்தியுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் பின்னா நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து, நவீன் திஸாநாயக்க தம்மை தாக்க முயற்சித்தார் என திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
தகாத வார்த்தைகளினால் திட்டி தம்மை தாக்குவதற்கு நவீன் முயற்சித்தார் என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் திலங்க சுமதிபால பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், சபாநாயகரிடமும் இது குறித்து முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Post a Comment