Header Ads



ஜனாதிபதி வீட்டுக்கு செல்ல வேண்டும் - திலித் ஜயவீர


சட்டவிரோதமான முறையில் கைதி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு ஜனாதிபதியே பொறுப்பு என சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.


எனவே இந்த தவறுக்காக ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.


தான் விடுதலை செய்த கைதி பற்றி தனக்கு தெரியவில்லை என ஜனாதிபதி கூறும் போது, காலையில் பத்திரிகைகளின் ஊடாகவே விடயங்களை அறிந்து கொண்டேன் எனக் கூறிய ஜனாதிபதியே நினைவிற்கு வருகின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கைதி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் நியாயமற்ற வகையில் சிறைச்சாலைகள் ஆணணயாளர் நாயகம் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதி பொது மன்னிப்பு பெற்றுக்கொள்ள வேண்டியவர்கள் பற்றிய விபரங்களை அனுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் நேரடியாக ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைப்பார் அவர் தெரிவித்துள்ளார்.


இந்தக் குற்றச் செயலுக்காக வீட்டுக்கு செல்ல வேண்டுமாயின் ஜனாதிபதியே வீட்டுக்கு செல்ல வேண்டுமென திலித் ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார். 


No comments

Powered by Blogger.