Header Ads



அம்பாறை பற்றி, வெளியாகியுள்ள அறிக்கை


அம்பாறை சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை மேற்கொள்ள மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு அறிவித்துள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது நீதியை நிலையட்டும் போது முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட B அறிக்கை பூரணமற்றது என தகவல் வெளியாகியுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவத்தால் பாதிப்புக்குள்ளான தனியார் உடமைகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாயலை புனர்நிர்மாணம் செய்ய விரையில் நஷ்டஈடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் பங்கெடுக்கும் அனைவருக்கெதிராகவும் தராதரம் பாராது சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

3 comments:

  1. So action will be for future incidents.. what about for this incident ?

    fooling us again and again. Law is not from today but from long time. Any one who involved in breaking masjid and shops should be brought to judgement and the security personnel for their non action too.

    ReplyDelete

Powered by Blogger.