Header Ads



பௌத்­தர்கள், முஸ்­லிம்­க­ளிடம் மன்­னிப்பு கேட்கத் தேவையில்லை - லக்ஷ்மன் கிரி­யெல்ல கருத்தை, வாபஸ்பெற வேண்டும்

முஸ்­லிம்­க­ளிடம் பௌத்­தர்கள் மன்­னிப்பு கோர­வேண்டும் என அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்த கருத்தை உட­ன­டி­யாக வாபஸ் பெற­வேண்டும் எனவும் அவர் பௌத்­தர்­க­ளிடம் மன்­னிப்பு கோர­வேண்டும் எனவும் ஓமல்பே சோபித தேரர் தெரி­வித்­துள்ளார். அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்கை ஒன்­றி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அண்­மையில் திகன மற்றும் அதனை சூழ­வுள்ள பிர­தே­சங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட செயற்­பா­டுகள் தொடர்பில் நாடா­ளு­மன்றில் கருத்துத் தெரி­விக்­கும்­போது, அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல, பௌத்­தர்கள் முஸ்­லிம்­க­ளிடம் மன்­னிப்பு கோர­வேண்டும் என கூறி­யி­ருந்தார்.

முன்­கோ­பத்­தினைக் கொண்டு குழு­வாக இணைந்து குழப்­பத்­தை­வி­ளைக்க முயல்­ப­வர்­களால் மேற்­கொள்­ளப்­படும் இத்­த­கைய பயங்­கர­வாத செயற்­பா­டுகள் பௌத்­தர்­களால் ஒழுங்­க­மைக்­கப்­பட்­ட­தல்ல. இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு முழு பௌத்த சமூ­கத்­தையும் குற்­றஞ்­சாட்­டு­வது பெருங்­குற்­ற­மாகும்.

இது இந்­நாட்டு மக்­களை மத்­தி­ர­மல்­லாது வெளி­நாட்­டி­லுள்ள மக்­க­ளையும் பிழை­யான வழியில் இட்­டுச்­செல்­லக்­கூ­டிய காரணி.

இதனால் பாரிய சம்­ப­வங்கள் ஏற்­ப­டக்­கூடும். அதனால் அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல கண்­மூ­டித்­த­ன­மாக மேற்­கொண்ட குற்­றச்­சாட்­டினை உட­ன­டி­யாக வாபஸ் பெற­வேண்டும் என்றும், பௌத்தர் களிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயவின் பேச்சாளர் ஓமல்பே சோபித தேரர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. ஆம். இது ஒட்டு மொத்த பௌத்த சமூகமும் திட்டமிட்டதல்ல.ஆனாலும் இப்படியான சம்பவங்கள் நடைபெறும் போது நல்ல பௌத்தர்களும் சேர்ந்து எதிர் தாக்குதல் நடாத்த முன் வரவேண்டும்.

    ReplyDelete
  2. Dear Himi...
    you didnt understand what minister said..
    Can you repeat his quote...?

    ReplyDelete
  3. IF ALL BUDDHISTS ARE REAL BUDDHISTS THEY BARE PRAISEWORTHY BY ALL WAYS AND MEANS. SAME WITH MUSLIMS AND OTHERS TOO. YOU CANNOT BLAME THE WHOLE COMMUNITY FOR THE MISDEEDS OF AN INDIVIDUAL OR GROUP.WE ALL MUST BE ASHAMED OF THE BEHAVIOUR OF A FEW IN EACH COMMUNITY.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.