Header Ads



5 சதத்திற்கும் பயனில்லாத 3 அமைச்சர்கள்

அரசாங்கத்தின் பிரதான அமைச்சு பதவிகளை பெற்றிருக்கும் டி.எம்.சுவாமிநாதன், மலிக் சமரவிக்ரம, திலக் மாரப்பன ஆகிய அமைச்சர்களாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஐந்து சதத்திற்கும் பயனில்லை எனவும், இவர்களை முன்னணியில் வைத்துக்கொண்டு தொடர்ந்தும் கட்சியால் பயணிக்க முடியாது எனவும் ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவருடன் நெருக்கமே பிரதான அமைச்சுக்கள் கிடைப்பதற்கான ஒரு தகுதியாக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களால் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வர முடியுமே தவிர 5 வாக்குகளை கூட பெற முடியாது. கட்சியில் மறுசீரமைப்பை மேற்கொள்வதாக பொய் கூறினால், மக்களிடம் செல்ல முடியாது.

கட்சியில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று கோரும் அணியினரும் உள்ளனர். கட்சிக்குள் மாத்திரமல்ல கட்சியின் தலைமையிலும் மாற்றம் வேண்டும் என்று சிலர் கடுமையான நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர்.

கட்சிக்குள் மறுசீரமைப்பை மேற்கொள்ளவில்லை என்றால், அணிகள் பிரிந்து செல்லும் ஆபத்து காணப்படுகிறது எனவும் வசந்த சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.