Header Ads



வீடற்ற மனிதன் செய்த செயல்: குவியும் பாராட்டு


பிரித்தானியாவில் வீடற்ற நபர் ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்த காரில் இருந்த பணத்தை மழையில் நனைந்தபடி பாதுகாத்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

சிப் சாப் உரிமையாளரான John McMonagle என்னும் நபர் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு நண்பருடன் அருகில் உள்ள இடத்துக்கு சென்றுள்ளார்.

£450 பவுண்ட்ஸ் பணத்துடன் காரின் இருக்கையில் அவரின் பர்ஸ் இருந்துள்ளது. அந்த வழியாக சென்ற James John McGeown என்னும் நபர் அதனை கவனித்துள்ளார், மேலும் கார் ஜன்னல் சரியாக மூடப்படாததால் உரிமையாளர் வரும்வரை அதன் அருகிருந்து பாதுகாக்க முடிவு செய்துள்ளார்.

மழை கடுமையாக பொழிந்த போதும் அதனை பொருட்படுத்தாமல் அருகில் நின்றபடியே இருந்துள்ளார். இரண்டரை மணி நேரம் கடந்தும் உரிமையாளர் வராததால் அருகில் இருந்த வழக்கறிஞர் அலுவலகத்தில் பர்ஸை ஒப்படைக்க முடிவு செய்துள்ளார்.

இந்த தகவலை ஒரு சீட்டில் குறிப்பிட்டு அதனை காரின் இருக்கையில் வைத்துவிட்டு சென்றுள்ளார். காரின் உரிமையாளார் அவரது நண்பர் அலிஷாவுடன் திரும்பியபோது இந்த தகவல் அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், சாலையில் படுத்து உரங்கும் அந்த நபர் ஒரு பைசா பணாத்தை கூட திருட முறச்சிக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் மொத்தமாக திருடி இருக்கலாம். ஆனால் அப்படி செய்யாதது என்னை நெகிழவைக்கின்றது.

அந்த நபருக்கு 40 பவுண்ட் நன்கொடையாக வழங்கியுள்ளேன், காலணிகள் வாங்கித்தரவுள்ளேன்.

மிகவும் நெகிழவைக்கும் விதமான அவரின் இந்த செயலை பாராட்டும் வகையில் வீடற்ற அந்த நபர் மற்றும் அவரைப் போன்ற வீடற்றவர்களுக்கு வீடு கட்டித்தரும் விதமாக நண்பர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நன்கொடை பெற திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் வீடற்ற அந்த நபருக்கு மூன்று மாதம் தங்கும் வசதியுடன் கூடிய வேலை வழங்கவுள்ளதாக அவரது நண்பர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Thirudi irunthaal, ethuvemey kidaithirukkaathu

    ReplyDelete

Powered by Blogger.