Header Ads



ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையில், சிரமங்கள் என்றால் அறிவிக்கவும்

ஸ்மார்ட் எனப்படும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை பயன்படுத்தும் போது சிரமங்கள் ஏற்பட்டால், அதற்கு உடனடி தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க அறிவித்துள்ளார்.

இதுவரை காணப்பட்ட தேசிய அடையாள அட்டையில் தமது பிறப்பாண்டின் இறுதி இலக்கம் மாத்திரம் குறிப்பிடப்பட்ட நிலையில் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையில் முழுமையான பிறப்பாண்டு குறிப்பிடப்பட்டிருக்கும்.

12 இலக்கங்களை கொண்ட இந்த இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பில் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டால் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தாம் செயற்படுவதாக வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் அடையாள அட்டையில் தேசிய அடையாள இலக்கம் தனியாக பதிவிடப்படவில்லை. இதனால் மக்கள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சிக்கல் நிலை ஏற்பட்டால் அதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

எனினும் இதற்கு பின்னர் வெளியிடப்படும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் இவ்வாறான சிக்கல்களுக்கு முகம் கொடுக்காத வகையில் அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.