Header Ads



ஒரு குடும்பமே உயிரிழந்த சம்பவம், மன்னிப்பு கேட்கும் ரஞ்சன்

பண கொடுக்கல் வாங்கலில் ஏமாற்றம் காரணமாக ஒரு குடும்பமே உயிரிழந்த சம்பவம் ஒட்டு மொத்த இலங்கையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியள்ளது.

ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை வாங்கிய நபர்கள், ஏமாற்றியமையால் ஐந்து பேர் கொண்ட குடும்பம் தற்கொலை செய்து கொண்டது.

குறித்த குடும்பத்தின் தலைவர் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தாய் மற்றும் பிள்ளைகள் நேற்று முன்தினம் விஷமருந்து உயிரிழந்தனர்.

தாய் மற்றும் மூன்று பிள்ளைகளின் இறுதி மரண சடங்குகள் நேற்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந்நிலையில் தாயின் மூலம் விஷம் கொடுக்கப்பட்ட உயிரிழந்த குழந்தைகளிடம் இலங்கை அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்னிப்பு கோரியுள்ளார்.

நேற்று நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வின் போது வைக்கப்பட்டிருந்த சடலங்கள் தொடர்பான புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ரஞ்சன் ராமநாயக்க, உயிரிழந்த குழந்தைகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

“மிகவும் வருத்தமாக உள்ளது. மன்னித்து விடுங்கள் மகனே, மகளே. உங்கள் மரணத்திற்கு நாங்களும் பொறுப்பு கூற வேண்டும். ஒரு குழு மகிழ்ச்சியை அனுபவிக்க இன்றும் ஒரு குழுவினர் கடன் செலுத்த முடியாமல் உயிரிழக்கும் இந்த சமுதாய முறையை மாற்ற வேண்டும்” என ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த பதிவையிட்டு மன்னிப்பு கோரியிருந்தார்.

2 comments:

  1. Salute to you Mr. Ranjan. We all feeling sad/shame about this incident. Poor Life's ...

    ReplyDelete
  2. திறந்த பொருளாதாரம் என்ற பெயரில் நவ தாராளமய பொருளாதாரக் கொள்கையை அறிகப்படுத்தி இந்நாட்டை நாசமாக்கியதன் விளைவுதான் இது. வாடகைக்கு, குத்தகைக்கு, விற்பனைக்கு என்ற கொள்கைதான் நாட்டில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றத. இந்நாட்டில் சமவுடமைச் சமூகமொன்று, சோஷலிஸத்தை கொள்கையாகக் கொண்ட அரசொன்று உருவாகாதவரை இந்த அவலங்கள் தொடரத்தான் செய்யும்.

    ReplyDelete

Powered by Blogger.