டன் பிரசாத்தின், கம்பி எண்ணும் காலம் நீடிப்பு
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம்- மியான்மார் அகதிகளுக்கான UNHCRன் வதிவிடத் தாக்குதல் வழக்கு.
டேன் பிரியசாத் மற்றும் ப்ரகீத் சானக (3 & 8 ம் சந்தேக நபர்) இன்று கல்கிஸ்ஸ நீதவானினால் 13/11 வரை முன்னைய பினை நிபந்தனைகளை மீறியமைக்காக தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் .
டேன் பிபிரியசாதின் பினை RRT மற்றும் CCD யினரால் 28/10 ம் திகதி வெள்ளிக்கிழமை கோட்டை நீதிமனறுக்கு முன்வைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கோட்டை நீதவான் பினையை இரத்துச் செய்தார். பினை நிபந்தனைகளை மீறியது தொடர்பாக தீர்ப்பு வழங்குவதற்கு நாளை 31/10 டேன் பிரியசாத் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளார்
மேலும் 9ம் சந்தேக நபர் அரபேபொல ரதனசார அல்லது லாபா சாமர 13/11 வரை அடையாள அணிவகுப்புக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஏனைய சந்தேக நபர்கள் 22/01/2018ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக 4 நபர்களைக் கொண்ட RRT குழு ஆஜராகியது.

Post a Comment