Header Ads



தமிழ்ப்பேசுவோர் வாழ்ந்த பகுதியில் 650 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம் - இனவிகிதாசாரம் மாற்றமடையும் ஆபத்து


திருகோணமலை – சலப்பையாறு பகுதியில்,  அனுராதபுர மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட  650 இற்கு மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள், அரசாங்கத்தினால் குடியேற்றப்பட்டுள்ளன.

சலப்பையாறு பிரதேசம், தமிழ்ப்பேசும் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பகுதியாகும். இங்கு யான் ஓயா திட்டம் என்ற போர்வையில், சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோமரங்கடவெல என்று சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ள, குமரேசன்கடவை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட, யான் ஓயாவுக்கு அருகே – கல்லப்பத்தை பிரதான வீதியை அண்டியே இந்த சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுமதியுடனேயே இந்த சிங்களக் குடியேற்றத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

650இற்கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள், அனுராதபுர மாவட்டத்தில் இருந்து கொண்டு வந்து இங்கு குடியேற்றப்பட்டுள்ளன.

அரசின் அமைச்சர்கள், அதிகாரிகளின் துணையுடன் இடம்பெற்றுள்ள இந்தக் குடியேற்றத் திட்டத்தில், நிரந்தர வீடுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் இனவிகிதாசாரத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனால், திருகோணமலை மாவட்டத்தின் இனவிகிதாசாரம் பெரிதும் மாற்றமடையும் ஆபத்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

2 comments:

  1. கிழக்கு தனியாக இருந்தால் வேறு என்ன தான் நடக்கும்?

    ReplyDelete
  2. Good move mix in eastern also.

    ReplyDelete

Powered by Blogger.