Header Ads



1000 கிலோ போதைப் பொருளை, புத்தளத்தில் எரித்து சாம்பலாக்க திட்டம்

சுமார் ஆயிரம் கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப் பொருளை எரித்து சாம்பலாக்குவதில் சிக்கல் நிலவுவதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பிடிக்கப்பட்ட 928 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப்பொருளை எரித்துவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்த போதைப் பொருளை எரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனினும், இவ்வளவு பெரிய தொகை கொக்கேய்ன் போதைப் பொருளை தகனசாலைகளில் எரித்துச் சாம்பலாக்க முடியாது என அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அதிக வெப்பநிலையுடன் இயங்கும் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் எரித்துச் சாம்பலாக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸாரினால் மீட்கப்பட்ட 1078 ஹெரோயின் போதைப் பொருளையும் எரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

5 comments:

  1. இது என்னடாப்பா புதுக்கதையா இருக்கு. புத்தளத்தில் மட்டும் தான் சீமெந்து தொழிற்சாலை இருக்கா என்ன. காலியில் அம்பாந்தோட்டை யில் இந்த தொழிற்சாலை இருக்குதே. எந்த குப்பையை கொண்டு போடுறது என்றாலும் புத்தளம் மட்டும் தான் அரசாங்கத்திற்கு தெரிகிறது

    ReplyDelete
  2. Wrong thing wrong choice

    ReplyDelete
  3. Wrong thing wrong choice

    ReplyDelete
  4. புத்தளத்தை இலங்கை அரசு - அதனை இலங்கையின் ஒரு பிரதேசமாக கருதாமல் - புத்தளம் அது இலங்கையில் முஸ்லீம்கள் மட்டும் வாழுகின்ற ஒரு ஒதுக்குப்புறப் பிரதேசமாகக் கருதுகிறது. எனவே அங்கே எல்லாவகையான குப்பைகளையும் கொட்டலாம் என அரசு நினைக்கிறது.

    எதிர்ப்பவர்களின் வாயில் பிட்டை்த் திணிக்க ஒரு திட்டமும் வைத்திருக்கிறது அரசு - நுலைச்சோலை அனல்மின்சார திட்டத்தை செயற்படுத்த உள்ளுர் அரசியல்வாதிகளுக்குத் திணித்தது போல்.


    புத்தள மாவட்ட சிங்கள முஸ்லீம் மக்கள் விழிப்படைந்து - அரசியல்வாதிகளை நம்பாமல் - ஆரோக்கியமான எதிர்புப் போராட்டம் நடாத்ததாத வரை - இலங்கையின் குப்பதை் தொட்டியாக புத்தளம மாறுவதை யாராலும் தடுத்துவிட முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.