Header Ads



இலங்கை Mp கள் குழு அமெரிக்கா விஜயம், எந்த முஸ்லிமுக்கும் இடமில்லை

சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஆய்வுச்சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு ஐக்கிய அமெரிக்கா பயணமாகியுள்ளனர்.

குறித்த பயணத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல்சிறிபால டீ சில்வா, பாலித ரங்கேபண்டார, சந்திராணி பண்டார, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் குமார வெல்கம ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையின் அமைவிடத்தை மையப்படுத்தி அதிக விளைவைத் தரக்கூடிய முதலீடுகள் தொடர்பிலான காரணிகளை கிவென் மூர் விளங்கியதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கேபண்டார தெரிவித்தார்.
காங்கிரசின் சர்வதேச நடவடிக்கைகள் தலைவர் டெட் எஸ் யொஹோவுடனான கலந்துரையாடல் மிகுந்த பயனுடையதாக அமைந்ததாக அமைச்சர் ரங்கேபண்டார மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய நிலை மிகவும் சிறந்த நிலையில் காணப்படுவதாகவும், உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில் எதிர்கால நடவடிக்கைகளை அமைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்தில் எந்த முஸ்லிம் Mp க்கும் இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



1 comment:

  1. உலகம் திரும்பிப்பார்ப்பது பர்மாவின் செயெல்போல் அல்லாமலிருக்கட்டும். சுமூகமானசூழல் எனும் பொய் அவிழ்துவிடும் என்பதால்தான் முஸ்லீம் அமைச்சர்கள் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.