Header Ads



"நாங்கள் சிறந்த பௌத்தர்கள், அரசியலுக்காக பௌத்தத்தை பயன்படுத்துவது தவறு" - சஜித்

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து சில் துணிகள் விநியோகிக்கப்பட்டுள்ளமை சட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் இதன்படி விநியோகிக்கப்பட்டது சில் துணி அல்ல விருப்பு வாக்கு துணி எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சில் துணிகளை வழங்குமாறு உத்தரவிட்டது தான் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டிருந்தால், அதிகாரிகள் தண்டனை அனுபவிக்க நேரிட்டிருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தல் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் இலக்குகளை அடைய பௌத்த மதத்தை பயன்படுத்துவது தவறு. சில் துணி வழக்கே தற்போது பலரும் பேசும் தலைப்பாக இருந்து வருகிறது.

நாங்கள் சிறந்த பௌத்தர்கள். எனது தந்தை சகல கிராம உதயங்களிலும் தாது கோபுரங்களை நிர்மாணித்தார்.

மாளிகாவில புத்தர் சிலையை நிர்மாணித்தார். தலதா மாளிகையில் தங்க வேலியை அமைத்துக்கொடுத்தார். நாங்கள் என்றும் பௌத்த மதத்தை பாதுகாப்போம்.

பௌத்த மதத்தின் முன்னேற்றத்திற்காக சில் துணிகளை விநியோகிப்பதில் தவறில்லை.

எனினும் இவர்களில் விநியோகித்தது சில் துணி அல்ல ஜனாதிபதித் தேர்தலுக்கான விருப்பு வாக்கு துணி. தேர்தல் காலத்தில் இதனை செய்தனர்.
சில் துணி வழங்குவதை அரசியல்மயப்படுத்துவது நியாயமானதா என நான் உங்களிடம் கேட்கிறேன்.

அரசியல் இலக்குகளுக்காக பௌத்த சமயத்தை பயன்படுத்துவது தவறானது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. மதம் யின் பெயரால் அரசியல் கட்சிகளே நடாத்துகிறார்களே!

    ReplyDelete

Powered by Blogger.