Header Ads



அரசாங்கத்தினால் சரியான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாததினால்தான் அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன

அரசாங்கத்தினால் சரியான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாத காரணத்தினால் தான் மீதொட்டமுல்ல போன்ற அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன என பாரளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -19- இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மீதொட்டமுல்லயில் இடம்பெற்றுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் இழப்பீடுகளை சந்தித்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு இலட்சம் ரூபா வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்த தொகை சாதாரணமாக ஒரு குடும்பத்திற்கு வாழ்க்கைச் செலவிற்கு கூட போதாது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வாறு ஒரு இலட்சம் ரூபா கொடுப்பது பொருத்தமில்லாத தீர்மானமாகும்.

எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதோடு, அவர்களுக்கு வீடுகளும் வழங்கப்பட வேண்டும்.

இதேவேளை இவ்வாறான அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்காக, மீள் சுழற்சி தொடர்பில் ஆராய வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கிறேன் என தெரிவித்தார்.


மேலும், இந்த குப்பைகளை அகற்றுவது தொடர்பில் கடந்த அரசாங்கத்தில் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்த இருந்தோம் ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் அந்த திட்டங்கள் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், இதற்கான மாற்று செயற்திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.