Header Ads



விக்னேஸ்வரன் ஒரு இனவாதி, மகிந்தவை ஏமாற்றியவர் - JHU

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இனவாதியாகவும், பிரிவினை வாதியாகவுமே செயற்பட்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று -30- இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் கருத்து அவர்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடக்கு முதல்வரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என திட்டமிட்டார். ஆனால் மகிந்த ஏமாற்றமடைந்து போனார்.

அதற்கு காரணம் அப்போது வாசுதேவ நாணயக்கார மகிந்தவின் நெருங்கிய நண்பராக இருந்தார்.

அவரின் உறவினரான விக்னேஸ்வரனுக்கு அதிகாரம் வழங்கினால், நட்பு, உறவு முறை போன்றவைகளினால் அவரை தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் வைத்திருக்கலாம் என மகிந்த நினைத்தார்.

ஆனால் சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் இருந்து வடக்கு சென்றவுடன் மாறிவிட்டார். அவர் நீதிபதி என்ற அறிவினைப் பயன்படுத்தாமல் பிரிவினை வாதியாகவே செயற்படத் தொடங்கினார்.

அவர் நல்லிணக்கத்திற்காக செயற்படவில்லை. பிரிவிகை வாதிகள் மற்றும் இனவாதிகளுடன் இணைந்து செயற்படத் தெடங்கினார்.

அது மட்டும் இல்லாமல் விக்னேஸ்வரன் தமிழ் மக்களை பிரிவினைவாதத்திற்கே அழைத்துக்கொண்டு செல்கின்றார் என நிசாந்த வர்ணசிங்க மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. நிஷாந்த வர்ணசிங்க நீங்கமட்டும் என்னையாம். நாட்டிலே பச்ச துவேசம், இனவாதம் பிடித்தவர்கள் நீங்களும் உங்கள் கட்சியும்தான். முதல்ல நீங்க திருந்துங்க அப்புறம் மற்றவர்களை பற்றிப்பேசலாம்.

    ReplyDelete

Powered by Blogger.