Header Ads



அமெரிக்காவின் மீது, எங்களுக்கு பயம் இல்லை - வடகொரியா


அமெரிக்கா கொண்டு வரும் தடைகள் மீது தங்களுக்கு பயம் இல்லை, தொடர்ந்து அணுசக்தி திட்டங்களை மேற்கொள்வோம் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியா எத்தகைய ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் சோதனை நடத்தக்கூடாது என ஐ.நா.சபை தடைவிதித்துள்ளது. எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதேபோல், அமெரிக்காவும் வடகொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை கொண்டு வருகின்றது.

அதை கண்டு கொள்ளாத வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது. இம்மாத தொடக்கத்தில் 4 ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது. 

இந்நிலையில், அமெரிக்கா கொண்டு வரும் தடைகள் மீது தங்களுக்கு பயம் இல்லை, தொடர்ந்து அணுசக்தி திட்டங்களை மேற்கொள்வோம் என்று வடகொரியா தெரிவித்துள்ளது. 

இது குறித்து ஐ.நா.விற்கான வடகொரியாவின் துணைத் தூதர் சோ மியாங் நாம் கூறுகையில், “எங்களுடைய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவே இத்தகைய ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறோம். அமெரிக்கா கொண்டு வரும் தடை கொடிய, மனிதாபிமானமற்ற செயல் ஆகும்” என்றார். 

முன்னதாக, வட கொரியா மீண்டும் நடத்திய புதிய ஏவுகணை சோதனை தோல்வி அடைந்ததாக தென் கொரியா ராணுவ அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இதை அமெரிக்க ராணுவமும் உறுதி செய்து இருந்தது. விண்ணில் ஏவுகணை  செலுத்தப்பட்ட சில வினாடிகளில் அது வெடித்து சிதறி விட்டது என கூறப்பட்டது.

No comments

Powered by Blogger.