Header Ads



பள்ளிவாசல் காணியை சுவீ­க­ரிக்க திட்டம் - பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும்­ கண்டனம்

-MM.Minhaj-

கடும் சர்ச்­சை­க­ளுக்­குள்­ளான திரு­கோ­ண­மலை கரு­ம­லை­யூற்று பள்­ளி­வா­சலை மீண்டும் சுவீ­க­ரிக்கும் நட­வ­டிக்­கைகள் சூட்­சு­ம­மாக எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக சபையில் குற்றம் சாட்­டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், தனது கடு­மை­யான கண்­ட­னத்தையும் வெளி­யிட்டார்.

இரா­ணு­வத்­தினர் இவ்­வாறு பாரம்­ப­ரிய காணி­களை திட்­ட­மிட்டு சுவீ­க­ரிக்கும் செயற்­பா­டு­களை எதிர்­கா­லத்தில் முற்­றாக கைவி­ட­வேண்­டு­மெ­னவும் அவர் வலி­யுறுத்­தினார்.பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை கைமீட்க முடி­யாத நன்­கொடை உறு­தி­களை முழு­மை­யான நன்­றி­யீனம் எனும் ஏதுவின் மீது கைமீட்டல் மற்றும் இலங்கை அர­சாங்கம், யுக்ரேன் அர­சாங்­கத்­திற்­கு­மி­டையே குற்­ற­வியல் கரு­மங்­களின் பரஸ்­பர சட்ட உத­வி­ய­ளித்தல் பற்றி ஏற்­ப­டுத்­தப்­பட்ட கட்­ட­ளை­களை அங்­கீ­க­ரிப்­பது தொடர்­பான சட்­ட­மூ­லங்­களின் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 

திரு­கோ­ண­மலை நாச்­சிக்­குடா, வெள்­ளை­மணல் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் விடயம் ஏற்­க­னவே கடும் சர்ச்சைக்­கு­ரிய விட­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. முன்­ன­தாக புரா­தனப் பள்­ளி­வா­சல்­களில் ஒன்­றான கரு­ம­லை­யூற்றுப் பள்­ளி­வாசல் அமைந்­துள்­ளதும் அதனைச் சூழ­வுள்­ள­து­மான காணி­களை கைய­கப்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. 

இதன்­போது 2ஆம் உலக யுத்­தத்தில் புகழ்­பெற்­றி­ருந்த பாரம்­ப­ரிய பள்­ளி­வா­ச­லான கரு­ம­லை­யூற்றுப் பள்­ளி­வாசல் சிதைக்­கப்­பட்­டது. இதனால் கடு­மை­யான சர்ச்­சைகள் எழுந்­தன. அதற்கு எதி­ராக கிழக்கு மாகா­ண­ச­பை­யிலும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

அதன் பின்னர் குறித்த விடயம் சம்­பந்­த­மாக பேச்­சு­வார்த்­தைகள் இரா­ணு­வத்­தி­ன­ருடன் மேற்­கொள்­ளப்­பட்­டது.  குறித்த பிர­தே­சத்­திற்கும் நேர­டி­யாகச் சென்­றி­ருந்தோம். இந்த சூழலில் சிதைக்­கப்­பட்ட அந்த பாரம்­ப­ரிய பள்­ளி­வா­சலை  மீண்டும் அமைத்து தரு­வ­தாக இரா­ணு­வத்­தினர் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தனர். 

ஆனால் தற்­போது நிலைமை மாறி­யி­ருக்­கின்­றது. காணி எடுத்தற் சட்­டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் அமைந்­துள்ள காணி உட்­பட அதனைச் சூழ­வுள்ள 4.65ஹெக்­டெயர் பரப்­ப­ள­வான காணியை இரா­ணு­வத்­தி­னரின் தேவைக்­காக சுவீ­க­ரிப்­ப­தற்­கான அறி­வித்­த­லொன்றை திரு­கோ­ண­மலை பட்­டி­னமும் சூழலும் பிர­தேச செய­லாளர் விடுத்­துள்ளார்.

முஸ்­லிம்கள் பூர்­வீ­க­மா­கவும் பாரம்பரிய பள்ளிவாசலும் காணப்படும் இக்காணிகளை சுவீகரிப்பதற்கு சூட்சுமமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு நான் இந்த சபையில் கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இராணுவத்தினர் இவ்வாறான செயற்பாடுகளை இரகசியமாக முன்னெடுப்பதை கைவிடவேண்டும் என்றார். 

5 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ் எனது கடமை முடிந்துவிட்டது,பள்ளி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஒரு மாதிரியாக யாருக்கும் மனம் புண் பட்டுவிடாமல் பேசி முடித்துவிட்டேன்,இதிலும் ஏதும் பிழைகள் இருந்தால் மன்னித்து விடுங்கள்.இப்படிக்கு சாணக்கியம்.

    ReplyDelete
  2. தம்புள்ள பள்ளி முஸ்லிம் பள்ளி இல்லையோ

    ReplyDelete
  3. All Muslims must stage extensive demonstrations against this sinister & unjust act of armed forces in trincomalee.

    ReplyDelete

Powered by Blogger.