Header Ads



நீர்கொழும்பில் இப்படியும் ஒரு கொள்ளை 'எமி' இலக்கங்களை கொண்டு பொலிஸார் நடவடிக்கை

(ரெ.கிறிஸ்­ணகாந்)

தொலை­பேசி சேவை வழங்கும் நிறு­வனம் ஒன்றின் நீர்­கொ­ழும்பு நகரில் அமைந்­துள்ள கிளையில் விற்­ப­னைக்­காக  காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்த போது திரு­டப்­பட்ட தொலை­பே­சி­களை விற்­பனை செய்த குற்­றச்­சாட்டில் சகோ­த­ரிகள் இரு­வரை  நீர்­கொ­ழும்பு சட்­டத்தை நிலை­நி­றுத்தும் பிரிவு பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

கடந்த ஜன­வரி மாதம் 14 ஆம் திகதி தொலை­பேசி சேவை வழங்கும் நிறு­வனம் ஒன்றின் நீர்­கொ­ழும்பு நகரில் அமைந்­துள்ள கிளையில்  விற்­ப­னைக்­காக  காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்த 14 செல்­லிடத் தொலை­பே­சி­க­ளையும் 4 ரவுட்­டர்­க­ளையும் பாது­காப்புப் பணியில் ஈடு­பட்­டி­ருந்த   உத்­தி­யோ­கத்தர் திருடிக் கொண்டு தலை­ம­றை­வா­கி­யி­ருந்தார்.  

குறித்த நிற­வனம் பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து திரு­டப்­பட்ட தொலை­பே­சி­களின் எமி (EMI) இலக்­கங்­களை வைத்து பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.

இதன் மூலம்  அந்த தொலை­பே­சிகள் பாவிக்­கப்­படும் இடங்கள் மற்றும் பாவிக்கும் நபர்கள் தொடர்­பான தக­வல்­களை பெற்று  அந்த நபர்­களை விசா­ரணை செய்­த­போது  குறித்த தொலை­பே­சி­களை விற்­பனை செய்த சந்­தேக நபர்­க­ளான  இரு சகோ­த­ரிகள் இனங்­கா­ணப்­பட்­டனர்.

அவர்கள்  இரு­வ­ரையும் விசா­ரணை செய்­த­போது  தலை­ம­றை­வா­கி­யுள்ள பாது­காப்பு  உத்­தி­யோ­கத்­தரின் சகோ­த­ரிகள்  அவர்கள் என்­பது தெரிய வந்­துள்­ளது.

திரு­டப்­பட்ட தொலை­பே­சி­களை அந்த சகோ­த­ரி­க­ளி­ட­மி­ருந்து பெற்று விற்­பனை செய்­வ­தற்கு இடைத்­த­ர­க­ராக இருந்த  மாத்­தறை பிர­தே­சத்தைச் சேர்ந்த நபர் ஒரு­வ­ரையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.  

திரு­டப்­பட்ட தொலை­பே­சி­களில் 9 தொலை­பே­சி­களை மீட்­டுள்­ள­தா­கவும், கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர்­களை மன்றில் ஆஜர் செய்­ய­வுள்­ள­தா­கவும், தலை­ம­றை­வா­கி­யுள்ள சந்­தேக நபரை கைது செய்ய நட­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும். பொலிஸார் தெரி­வித்­தனர்.

நீர்­கொ­ழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பியலால் தச­நா­யக்­கவின் ஆலோ­ச­னையின் பேரில் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் லலித் ரோஹ­னவின் வழி­காட்­டலில் சட்­டத்தை நிலை நிறுத்தும் பிரிவின் பொறுப்­ப­தி­காரி  பிர­தான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகர, பொலிஸ் பரிசோதகர்களான ஏ.எம். ரஹுப், எச்.எம்.சந்தன,  டெனி பெரேரா, கான்ஸ்டபிள்களான அமல், ஜயசிங்க , சமித்  ஜயசேகர ஆகியோர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதோடு தொலைபேசிகளையும் மீட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.