Header Ads



கல்குடாவில் மதுத், தொழிற்சாலைக்கான முயற்சி முறியடிக்கப்படும் - பைஸர்

பெர்பெச்சுவல் டிரெஷரிஸ் நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாவில் திறக்கவுள்ள மதுபான தயாரிப்பு நிலையத்துக்கு தனது பூரண எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும், அதனை நிர்மாணிக்கவிடப்போவதில்லை என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் முஸ்தபா மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

நிதியமைச்சின் விசேட வரிச்சலுகையின் கீழ் நிர்மாணிக்கப்படவிருந்த கல்குடா தொழிற்சாலை ஒருசில வேலைவாய்ப்புகளை வழங்கும் என்ற போதிலும் அது தயாரிக்கும்

மதுவால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் எனஅவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் தான் ஜனாதிபதிக்கும் தெரிவிக்கவிருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சி ஆதரவாளர்களும்

இணைந்து இந்தத் தொழிற்சாலைக்கான முயற்சியை முறியடிப்பார்கள் எனவும் அவர் திட்டவட்டமாகத் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. மத நிறுவனங்கள் ஒன்றிணைந்து மற்றொருபுறம் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கலாம்.

    கல்குடா குடிகளுக்கு மட்டுமல்லவே கள் கூடா!

    ReplyDelete

Powered by Blogger.