Header Ads



கொழும்பில் முஸ்லிம்களுக்கு பெரும் ஆபத்து - எச்சரிக்கிறார் முஜிபுர் ரஹ்மான்

மத்­திய கொழும்பில் வேலை வாய்ப்­பின்றி இருக்கும் முஸ்லிம் இளை­ஞர்­களில் அதி­க­மானோர் போதைப் பொருள் விற்­ப­னையில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்கள்.  

இளை­ஞர்­களை  இந்த ஆபத்­தி­லி­ருந்து  காப்­பாற்­று­வ­தற்கு மத்­திய கொழும்பில் தொழிற்­ப­யிற்சி  நிலை­ய­மொன்­றினை  நிறுவி  மாதம் 10 ஆயிரம் ரூபா கொடுப்­ப­ன­வுடன் தொழிற்­ப­யிற்­சிகள் வழங்க அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ளது என கொழும்பு மாவட்ட  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான்  தெரி­வித்தார். 

கொழும்பு மரு­தானை  அஸ்ஸபாப்  கேட்போர் டத்தில் நடை­பெற்ற அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் கொழும்பு  மாவட்ட முஸ்லிம் பாட­சா­லை­களை அபி­வி­ருத்தி செய்தல் தொடர்­பான கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொண்டு உரை நிகழ்த்­து­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.  அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின்  தலைவர் பேரா­சி­ரியர் ஹுசைன் இஸ்­மாயில் தலை­மையில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலில் அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில் தெரி­வித்­த­தா­வது, 

'கொழும்பு மாவட்ட முஸ்லிம் மாண­வர்­களின் கல்வி நிலைமை தொடர்ந்தும் வீழ்ச்­சி­ய­டைந்து வரு­கின்­றமை சமூ­கத்­துக்குப் பெரும்  ஆபத்­தாகும்.  இந்­நி­லை­மை­யினைச் சீர்செய்­வ­தற்கு அர­சியல்வாதி­க­ளினால் மாத்­திரம் முடி­யாது. சிவில் சமூ­கமும்  ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். 

மத்­திய கொழும்பில் க.பொ.த. (சா/த)  பரீட்சை எழுதும்  முஸ்லிம்  மாண­வர்­களில் 70 சத­வீ­த­மானோர்  சித்­தி­ய­டை­வ­தில்லை. இதனால்  இவர்­க­ளுக்குத் தொழில் வாய்ப்பும் பெற்­றுக்­கொள்ள முடி­வ­தில்லை. தொழில் இன்­மை­யி­னாலே இவர்கள் போதைப்­பொருள் விற்­ப­னையில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்கள். 

சிறந்த பாட­சா­லை­களில் தமது பிள்­ளை­க­ளுக்கு அனு­மதி கிடைக்­கா­த­தினால் பெற்றோர் பிள்­ளை­களை சர்­வ­தேச பாட­சா­லை­களில் அனு­ம­திக்­கி­றார்கள். சர்­வ­தேச பாட­சா­லைகள் கொழும்பில்  சில்­ல­றைக்­க­டைகள் போல் பர­வி­யுள்­ளன. அரபு பெயர்­க­ளுடன் இயங்கி வரும் சர்­வ­தேச  பாட­சா­லை­க­ளினால் கல்வி நிலைமை பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. 

சர்­வ­தேச  பாட­சா­லை­களில் பிள்­ளை­களைச் சேர்த்து சில வரு­டங்­களில் மீண்டும்  அம்­மா­ண­வர்­களை  தமிழ் மொழி  பாட­சா­லை­களில்  சேர்ப்­ப­தற்கு  வரு­கி­றார்கள். இதனால்  மாண­வர்­க­ளுக்கு மொழிப்­பி­ரச்­சி­னையும் ஏற்­ப­டு­கி­றது.  ஆரம்­பத்தில் ஆங்­கிலம்  கற்ற மாண­வர்கள் பின்பு தமிழில் கற்க வேண்­டி­யேற்­ப­டு­கி­றது. 25 வரு­ட­கா­ல­மாக இந்­நிலை  தொடர்ந்து  வரு­கி­றது.  இது ஆபத்­தான நிலை­யாகும். 

கொழும்பு மாவட்­டத்தின்  கல்வி நிலை­மையை மேம்­ப­டுத்த  அனை­வரும் முயற்­சிக்­கி­றார்கள். பல இயக்­கங்கள் களத்தில் இறங்­கி­யுள்­ளன.  ஆனால் எதிர்­பார்க்கும்  பிர­தி­பலன் மாற்றம் ஏற்­ப­ட­வில்லை.  இதற்­கான கார­ணத்தை  ஆராயும் போது சமூக சூழல், வறுமை, பெற்றோர்  கல்­வி­ய­றி­வின்மை என்­ப­னவே கார­ணங்­க­ளாக அறி­யப்­பட்­டுள்­ளன. 

முஸ்லிம்  மாண­வர்­களில் 70 வீத­மானோர் சிங்­கள மொழி­யி­லேயே கல்வி கற்­கி­றார்கள்.  30 வீத­மா­னோரே தமிழ் மொழியில் கற்­கி­றார்கள். 

பரீட்சை முடி­வு­களை ஆராய்ந்து பார்த்தால் சிங்­கள  மொழியில் கற்­ப­வர்­களின் பரீட்சை முடி­வுகள் தமிழ் மொழியில் கற்­ப­வர்­களின் முடி­வு­களை விடவும் குறை­வா­கவே இருக்­கி­றது.  சிங்­கள  மொழிப்  பாட­சா­லை­களில் (சிங்­களப் பாட­சாலை) பயிலும் முஸ்லிம்  மாண­வர்­களின் பரீட்சை  முடி­வுகள் முஸ்லிம் பாட­சா­லை­களில்  சிங்­கள மொழியில் பயிலும் மாண­வர்­களின் பரீட்சை  முடி­வு­களை விட சிறந்­த­தாக இருக்­கி­றது. 

ஏ.ஈ.குண­சிங்க வித்­தி­யா­ல­யத்தை ஒரு மாதிரி  முஸ்லிம் ஆரம்ப பாட­சா­லை­யாக மாற்­றினோம்.  350 பிள்­ளை­களின் பெற்றோர்  கூட்­டங்­க­ளுக்கு வந்­தார்கள். ஆனால் 50 மாண­வர்­களே  அனு­மதி பெற்­றார்கள். இப்­பா­ட­சா­லையில் இஸ்லாம்  போதிக்­கவும் ஆசி­ரியர்  நிய­மிக்­கப்­பட்டார். எமது  பெற்­றோரின்  மனோ­நி­லையில் மாற்றம் ஒன்று ஏற்­பட வேண்டும். அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை இதற்­கான ஏற்­பா­டு­களைச் செய்ய வேண்டும். 

கொழும்பில் சர்­வ­தேச ஹோட்­டல்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு  வரு­கின்­றன. கொழும்பில்  தொழில்­வாய்ப்­பின்றி இருக்கும் இளை­ஞர்­க­ளுக்கு அவற்றில் தொழில் வாய்ப்­பினைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­காக மத்­திய கொழும்பில் ஹோட்டல்  பாட­சா­லை­யொன்­றினை நிறு­வும்­படி சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­ரையும் பிர­த­ம­ரையும் கோரி­யுள்ளேன். 

கொழும்பில் முஸ்­லிம்­களின் கல்­வியை முன்­னேற்­று­வ­தற்கு  இம்­மக்­களின்  வாழ்க்கைத் தரத்­தி­னையும் உயர்த்த நட­வ­டிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதற்கான திட்டங்களையும் முஸ்லிம் கல்வி மாநாடு  வகுக்க வேண்டும். கொழும்பில் பாடசாலைக்கே  செல்லாத பிள்ளைகள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். பிறப்புச்சாட்சிப் பத்திரம்கூட இல்லாத பிள்ளைகள் நூற்றுக்கணக்கானோர் இருக்கிறார்கள். பெற்றோரின் கவனயீனம்,  பெற்றோர் பிரிந்து வாழ்கின்றமை போன்றவையே இவற்றுக்கான காரணங்களாகும். இவர்களை இனங்கண்டு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றார்.

ARA.Fareel

4 comments:

  1. May allah save our community

    ReplyDelete
  2. அவசரமாக கொழும்பு மக்களின் கல்வியில் முன்னேற்றம் செய்ய வேண்டுமானால் நன்கு உளவியல் தெரிந்த நல்ல சேவை மனப்பான்மை உள்ள ஆசிரியர் குழு ஒன்று தேவை .சர்வதேச பாடசாலைகள் போன்று இங்கு கட்பித்தல் நடவடிக்கைகள் காணப்பட வேண்டும் .மாணவர்களிடம் எவ்வித கட்டணங்களும் அறவிடல் கூடாது .இதட்கான செலவுகளை கவனிப்பதட்கு வர்த்தகர்களை கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் .இந்த மாணவர்களின் திறமைகளை ஊடகங்கள் மூலம் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் .

    ReplyDelete
  3. This has bee a big issue for many years now ..why did not Clolombo Muslims did not realise this for many years and why politicians fail on them .. all Muslim politicians who came to power in Colombo didn't care and now is time for you think about it ?

    ReplyDelete
  4. மாணவர்கள் மத்தியில் மாவட்ட ரீதியில் போட்டிகளை நடத்தி ஊக்கவிக்க வேண்டும் இதற்கான பொருளாதார செலவுகளை தனவந்தர்கள் மறுமைக்காக வேண்டி செலவொ செய்ய முன்வர வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.