Header Ads



"இது முஸ்­லிம் சமூகத்தின் பரிதாபம்.."

-ARA.Fareel-

பரீட்சைத் திணைக்­க­ளத்தில் உயர் பத­வி­களில் சுமார் 50 பேர் கட­மை­யாற்­று­கி­றார்கள். இவர்கள் ஆணை­யாளர் நாயகம், ஆணை­யா­ளர்கள், உதவி ஆணை­யா­ளர்­க­ளாவர். இவர்­களில் 6 பேர் தமிழ் இனத்தைச் சேர்ந்­த­வர்கள்.

முஸ்­லிம்­களில் நான் மாத்­தி­ரமே உயர் பதவி வகிக்கிறேன். எனக்கு பிறகு எவரும் இல்லை. எனவே முஸ்லிம் அமைச்­சர்கள் கல்வி அமைச்­ச­ருடன் கலந்­து­ரை­யாடி பரீட்சைத் திணைக்­க­ளத்தின் உயர் பத­வி­களில் முஸ்­லிம்­களை உள்­வாங்க வேண்டும் என பரீட்­சைகள் ஆணை­யாளர் ஏ.எஸ். முஹம்மட் தெரி­வித்தார்.

கொழும்பு மரு­தானை அஸ்ஸபாப் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற முஸ்லிம் கல்வி மாநாட்டின் கலந்­து­ரை­யா­டலில் கலந்துகொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில், 

பரீட்சைத் திணைக்­க­ளத்தில் நாம் இருவர் உயர் பத­வி­களில் இருந்தோம். ஒருவர் ஓய்வு பெற்று விட்டார். நான் கடந்த மே மாதம் ஓய்வு பெற்றேன். என்­றாலும் எனது பத­விக்­காலம் மேலும் ஒரு வரு­டத்தால் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. நான் ஓய்வு பெற்ற பின்பு பரீட்சை திணைக்­க­ளத்தில் உயர் பத­வியில் எவரும் இல்லை.

பரீட்சைத் திணைக்­களம் ஒரு முக்­கிய இட­மாகும். இங்கு உயர் பத­வி­களில் நாம் இருந்­தாலே எமது உரி­மை­க­ளுக்குக் குரல்­கொ­டுக்­கலாம்.

கொழும்பு மாவட்­டத்தில் முஸ்லிம் மாண­வர்­களின் கல்வி நிலை தொடர்ந்தும் வீழ்ச்­சி­ய­டைந்து வரு­கின்­றது. 2014 ஆம் ஆண்டு கொழும்பு மாவட்­டத்தில் க.பொ.த (சா/த) பரீட்­சையில்10 முஸ்லிம் மாண­வர்கள் 9 ஏ சித்­திகள் பெற்­றார்கள். இந்­நி­லைமை 2015 இல் 7 ஆகக் குறைந்­தது.

மாண­வர்­களின் கல்வி நிலை­மையை மேம்­ப­டுத்த திட்­ட­மிட்டு  செயற்­பட வேண்டும். பாட­சா­லை­களில் அதிபர், ஆசி­ரியர் பற்­றாக்­குறை இருக்­கலாம். மேலும் பெற்­றோர்கள் தமது கல்வி விட­யத்தில் அதிகம் கவனம் செலுத்­து­வ­தில்லை. மாண­வர்­களும் படிப்­பதை விட உழைப்­ப­தையே விரும்­பு­கின்­றார்கள்.

வியா­பாரம் செய்யும் பெற்­றோர்கள், தமது பிள்­ளை­யையும் வியா­பா­ரம் செய்ய வேண்­டு­மென எதிர்­பார்ப்­ப­தில்லை. பெற்­றோர்­களை ஆசி­ரி­யர்­களும் புத்­தி­ஜீ­வி­களும் விழிப்­பு­ணர்­வூட்ட வேண்டும். 

கடந்த 5 வரு­டத்தில் கொழும்பு மாவட்­டத்­தி­லி­ருந்து வைத்­தி­யத்­து­றைக்கு எந்­த­வொரு முஸ்லிம் மாண­வனும் தெரிவு செய்­யப்­ப­டாமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

கடந்த மாதம் நடை­பெற்ற SLES பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த 5 முஸ்­லிம்கள் நிய­மனம் பெற்­றுள்­ளார்கள். அவர்­க­ளுக்கு பரீட்சை திணைக்­க­ளத்தில் நிய­மனம் வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்ய வேண்டும். 

பரீட்சை திணைக்­க­ளத்தில் கட­மை­யாற்றும் முஸ்லிம் அதி­கா­ரிகள் நிர்­வாக தரத்தில் நிய­மனம் பெற்­றுக்­கொள்ள பரீட்­சைகள் எழுதி சித்­தி­ய­டைய வேண்டும் என்றார்.

கலந்­து­ரை­யா­டலில் ஹமீ­தியா குரூப்பின் தலைவர் பௌசுல்­ஹமீட், அகில இலங்கை முஸ்லிம் வாலிப சம்­மே­ள­னத்தின் தலைவர் பி.எம்.பாரூக், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன், எழுத்­தாளர் எஸ்.ஐ.நாகூர்­கனி, உல­மா­ச­பையின் பிர­தி­நிதி நமாஸ், எஸ்.எல்.மன்சூர், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் உதவிச்செயலாளர் எம்.எம்.எம்.ரில்வான், ஸம் நிதியம், சைலான் பவுன்டேசன் பொறியியலாளர் அகா பாரி, இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் செயலாளர் ரஷீட் எம்.இம்தியாஸ், தலைவர் பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.     

2 comments:

  1. nowdays youngters dont even bother to complete A/L or thinking about having degree as minimum educational qualification. insted they are keen following some half baked technical cources and looking for jobs in GCC for salaries in lakhs.
    these technical courses are encouraged by the socalled educated society in our society by making youngters brained wash of earning.
    these socalled education shop owners like BCAS must stop this money greedy business and promote youngters to complete there secindary and higher education with strong base.

    ReplyDelete
  2. This is a serious problem of Muslims due to one main
    reason that they are Muslims. Muslims are not serious
    about a meaningful life in this world . They fail to
    UNDESTAND THAT WITHOUT A MEANINGFUL LIFE IN THIS
    WRLD , THERE'S NO EARNINGS FOR THE LIFE HEREAFTER .
    Muslims are branded for ages now,as wealth hunters !
    THEY ARE GENERALLY NOT READY TO START A FAMILY
    LIFE WITHOUT DEMANDING CASH FROM THE GIRL ! NOTHING
    ELSE WILL MATTER TO THEM .The recent trend is looking
    for an educated and employed girl ! What for ? INCOME
    GUARANTEE ! Nothing else . Most parents with girls
    are running after girls' education to be safe from
    marriage issues . So , more girls are shining in
    schools and exams and even end up in degrees ,good
    news for a few but the majority boys and girls ?
    The worst part , Srilankan Muslims , educated or
    not , have no clue whatsoever about world economic
    situations that are struggling to keep in shape.
    Have we got nothing to do with it ? Shouldn't we
    learn to adjust ourselves and do more hard work
    in studies and at work or business to overcome
    the consequences ? Change our lifestyles where
    necessary ? Our country itself is in crisis and
    do we at least understand it in order to feel it ?
    Money Money Money , Saudi Saudi Saudi , Run Run
    Run is the MANTRA !

    ReplyDelete

Powered by Blogger.