Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு, அழிந்து போவதை தடுக்க முயற்சி (76 என்கிற குழு, களத்தில் குதிப்பு)


-முஹம்மது ராஜி- 

யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு மற்றும் பண்பாடு  திட்டமிட்ட ரீதியில் அழிக்கப்பட்டு வருவதை  தடுக்கும் ஒரு முயற்சியாக யாழ்ப்பாண சோனகதெருவில் உள்ள அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வீடியோ தொகுப்பு ஒன்றை வெளியிடும் பணியில் யாழ்ப்பணம் 76 என்கிற குழு இறங்கியுள்ளது .

ஏற்கனவே google map இல் யாழ்ப்பாண சோனக தெருவில்  வீதிகளின் பெயர்கள் தவறாக மாற்றப்பட்டுள்ளதை முன்னெடுத்த அந்த குழு, youtube இல் jaffna 76 என்ற தனியான சணல் ஒன்றை ஆரம்பித்துள்ளது .

இதன் படி யாழ்ப்பாண சோனக தெருவில உள்ள  அனைத்து  வீதிகள் , பள்ளிவாசல்கள் , முஸ்லீம் பாடசாலைகள் மற்றும் அங்கு நடைபெறும் முக்கியமான முஸ்லீம் வைபவங்கள் , வரலாற்று ஆவணங்கள் ,வரலாற்று பதிவுகள் ஆகியன பதிவேற்ற திட்டமிடப்பட்டுள்ளன .

அரசியல் ரீதியாக கைவிடப்பட்டுள்ள யாழ்ப்பாண முஸ்லிம்களின் உடமைகளின் நிலை பற்றிய சர்வதேச விழிப்புணர்வு ஒன்றையையும் இதன் மூலம் ஏற்படுத்த முடியும் என அந்த குழு நம்புகிறது .

இதன் முதல்கட்டமாக யாழ்ப்பாண சோனக தெருவில உள்ள  பள்ளிவாசல்கள் , வீதிகள் ,மற்றும் பாடசாலைகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன .

யாழ்ப்பணத்தில் இருந்து சமாதான நீதவான் அப்துல் கரீம் ஹஸ்ஸான் வீடியோ மூலமாக இவற்றை தொகுத்து வழங்கி வருகிறார். பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோக்களை jaffna 76 என்று தேடுவதன் (search ) பண்ணி காண முடியும் 

2 comments:

  1. முதலில் காணிகளை காப்பாற்றுங் மேன்

    ReplyDelete
  2. Good job please support those kind of work, at least make duaa

    ReplyDelete

Powered by Blogger.