Header Ads



அம்­பாறை முஸ்­லிம்கள் பீதி­, ஆபத்தை தடுக்க வேண்டும் என்கிறார் ஹிஸ்­புல்லாஹ்

-ARA.Fareel-

தொல்­பொருள் திணைக்­களம் அம்­பாறை மாவட்­டத்தில் 423 இடங்­களை தொல்­பொருள் பிர­தே­சங்­க­ளாக இனங்­கண்­டுள்­ள­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

இதனால் அம்­பாறை மாவட்­டத்தில் பெரும்­பான்­மை­யாக வாழும் முஸ்­லிம்கள் தங்­க­ளது காணிகள் தொடர்பில் பீதி­ய­டைந்­துள்­ளனர்.

இச் சந்­தர்ப்­பத்தில் அம்­பாறை மாவட்­டத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­திகள் முஸ்­லிம்­களின் காணி­க­ளுக்கு ஆபத்து ஏற்­ப­டு­வதைத் தவிர்க்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என மீள்­கு­டி­யேற்றம் மற்றும் புனர்­வாழ்வு இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார்.

அம்­பாறை மாவட்­டத்தில் தொல்­பொருள் திணைக்­களம் மேற்­கொண்­டுள்ள தொல்­பொருள் ஆய்­வுகள் தொடர்பில் வின­வியபோதே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில்;

சம்­மாந்­துறை, இறக்­காமம் போன்ற பகு­தி­களில் தொல்­பொருள் ஆய்­வுகள் என்ற ரீதியில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் நட­வ­டிக்­கை­க­ளினால் அப்­ப­கு­தியைச் சேர்ந்த மக்கள் மத்­தியில் பீதி நில­வு­கி­றது. அவர்கள் தமது பூர்­வீகக் காணிகளை இழந்து விடு­வோமோ என்று அங்­க­லாய்க்­கின்­றனர். இந்­நி­லையில் அம்­பாறை மாவட்­டத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் அர­சியல் தலை­வர் உட­ன­டி­யாக செயலில் இறங்க வேண்டும்.

தொல்­பொருள் எல்லா இன மக்­க­ளுக்கும் சொந்­த­மா­ன­தாகும். அனை­வரும் இதனைப் பாது­காக்க வேண்டும். அதே­வேளை தொல்­பொருள் ஆய்­வுகள் என்ற போர்­வையில் முஸ்­லிம்­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­படக் கூடாது. அம்­பாறை மாவட்­டத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளுக்கு ஏனைய முஸ்லிம் பிர­தி­நி­திகள் இவ்­வி­வ­கா­ரத்தில் ஒத்­து­ழைப்பு வழங்கத் தயா­ராக இருக்­கி­றார்கள்.

தொல்­பொருள் திணைக்­களம் இனம் கண்­டுள்ள 423 இடங்­க­ளையும் ஆய்­வுக்­குட்­ப­டுத்தும் போது அப்­ப­கு­தியில் அசா­தா­ரண சூழ்­நி­லை­யொன்றும் உரு­வா­கலாம். இது நல்­லி­ணக்­கத்­துக்கும் நல்­லு­ற­வுக்கும் பங்­க­மாக அமையும்.

அம்­பாறை மாவட்டம் 43 வீத முஸ்­லிம்­களைக் கொண்­டுள்­ளது.

இம்­மா­வட்­டத்தில் இப்­பா­ரிய எண்­ணிக்­கை­யி­லான இடங்கள் தொல்­பொருள் பிர­தே­சங்­க­ளாக இனம் காணப்­பட்­டுள்­ளமை அங்­குள்ள முஸ்­லிம்­களை வேறு இடத்துக்கு இடம்பெயரச் செய்யும் நடவடிக்கையாகவும் இருக்கலாம் எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது. எனவே அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதிகள் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றார்.

No comments

Powered by Blogger.