Header Ads



வரலாற்றில் முதன்முறையாக, யாழ்ப்பாணத்தில் தேசிய மீலாத் விழா


(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)

இவ்வருடத்திற்கான (2017) தேசிய மீலாத் விழா யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் நடைபெறவுள்ளதாக முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம், ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.

அமைச்சர்கள் ஹலீம் மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் இணைந்து இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

முன்னர் மன்னாரில் மாத்திரம் தேசிய மீலாத் விழாவை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. அத்துடன் அமைச்சர் கபீர் ஹாசிம் தமது பகுதியில் நடாத்தவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே தற்போது முஸ்லிம் சமய விவகார அமைச்சானது யாழப்பாணத்திலும், மன்னாரிலும் இவ்வருடத்திற்கான தேசிய மீலாத் விழாவை நடாத்த உத்தியோகபூர்வமாக தீர்மானித்ததாக அமைச்சர் ஹலீம் கூறினார்.

இதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்கப்படுமென ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சுட்டிக்காட்டிய அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர்  பாஹிம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானும் இதுதொடர்பிலான கோரிக்கையை முன்வைத்திருந்ததாக கூறினார். 

அதேவேளை இதுதொடர்பில்  ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கருத்துக்கூறிய அமைச்சர் றிசாத் பதியுதீன்,

யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களையும், பள்ளிவாசல்களையும், மதரஸாக்களையும் உயிர்பெறச் செய்யும் நோக்குடன் இம்முறை தேசிய மீலாத் விழாவை யாழ்ப்பாணத்திலும் நடாத்த  தான் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டதாகவும், இதனால் மன்னாருடன் இணைந்ததான அபிவிருத்தியை யாழ்ப்பாணமும் பெற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

டாக்டர் ரம்ஸி தலைமையிலான யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழு, அண்மையில் அமைச்சர் ஹலீமை சந்தித்து, யாழ்ப்பாணத்தில் இவ்வருடத்திற்கான தேசிய மீலத் விழாவை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

9 comments:

  1. Our Rasool or Sahabah never celebrated nor encouraged his birth. Our community consumes Riba and celebrates Rasool's birth. Great.

    ReplyDelete
  2. தேசிய மீலாத் விழாவானது முஸ்லிம் பிராந்தியங்களை அபிவிருத்தி செய்து கொள்வதற்காக அரசாங்கம் வழங்குகின்ற சந்தர்ப்பமாகும். ஆனால் இந்த சந்தர்பத்தை எந்தளவு தூரம் எமது அரசியல் தலைவர்களும் பிராந்திய தலைவர்களும் சமூக பிரையோசனத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை பொருத்தே முஸ்லிம் சமூகத்தின் அபிவிருத்தியில் செல்வாக்கு செலுத்தும் காரனியாக அமையும் இதற்கு மாற்றமாக பெயரளவில் விழாவாக நடைபெற்றால் சமூகத்துக்கு அதன் அளவில் எந்த தேவையும் இல்லை இருதியாக வெளிமடையில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவின் ஊடாக அந்த பிரந்திய பள்ளிவாயல்களோ,அறபு மத்ரசாக்களோ,பிராந்தியத்தின் பாதைகளோ அபிவிருத்தி செய்யப்படவில்லை என்பதோடு அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட பண ங்கள் கூட இதுவரை கிடைக்க பெறவில்லை.நடைபெற இருக்கின்ற விழாவிலாவது இது போன்ற தவறுகள் மோசடிகள் நடைபெறாமல் உரியவர்கள் கவனம் செலித்த வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. தற்பொழுது கிடைத்த தகவல் சில பாதைகள் மாத்திரம் அபிவிருத்தி செய்யப்படுவதாக

      Delete
  3. Competing to stage a BIDA.

    Meelad-Villa MEANS "CELEBRATING BIRTH DAY" Which was first introduced to the world by EGYPTIAN FIRAWN as for the world history records.

    DUE the FIRAWN innovation.. EVEN past days CHRISTIAN churches were against to celebrating BIRTH DAY.. As Firawn was an enemy of ALLAH and he was against to the teachings of Mosa (al).

    BUT it is very unfortunate that... WE Muslims, who says we love Muhammed (sal), but due to our ignorance.. Many of us follow FIRAWAN in the matter of BIRTH DAY ( MEELAD or MAWLEED).

    Muhammed (sal) has in many places warned us not to follow JEWS and NASARA, even though they have trust in Allah but they deviated from fallowing their prophets. It that is the case.. HOW come we Muslim take the sunnah of the ENEMY of Allah who is FIRAWN ?

    Further...

    NO Anbiya (nabi) has celebrated birth day
    No Our beloved muhammed (sal) has done it for any of his relatives
    Not a single Qulafaur Rashidoon did celebrate Mawleed for Nabi
    No any sahaaba did celebrate Mawleed for our Nabi
    Non of the respectable 4 Imaams celebrated Mawleed for our Nabi.
    No scholars who stick to the way of sahaab (ral) agree with Mawleed.

    BUT it Mawleed (sunnah of Firawn) was first introduced to followers of Islam, by FATHIMEET Shia Rulers of Egypt ( Year 921 to 1171).
    That is why MAWLEED celebration is more famous in SHIA community and then some sunnis who blindly accept every Bida as religion also started to follow them by their footsteps.

    A TRUE MUSLIM, Who follow the Sunnah Muhammed (sal) will not even think but hate to celebrate the Sunnah of FIRAWN and SHIA.

    NOTE: it is very unfortunate.. So call JAMAATHS of Sunnah in Srilanka who are with ACJU do give many reasoning and sit on this BIDA MAWLEED STAGES.

    Brothers and so called JAMAATH leaders who support Meelad and find it benifitial to Muslims.. I ASK you one question.. DO you know batter then Muhammed (sal), His companions and 4 imaams, which is batter for muslims and Islam ?

    Allah is enough for you..

    We will be witness over you all so called leaders of your misguiding of people, insha Allah.

    ReplyDelete
  4. அமைச்சர் அவர்களே - மீலாத் எல்லாம் இருக்கட்டும். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா ???

    அதாவது - நமக்கு உள்ளதே இரன்டே இரன்டு பெருநாட்கள்தான். ஆனாலும் இதில் ஒன்றுக்காவது வர்த்தக விடுமுறை இல்லை என்பது உங்களுக்கோ அல்லது நமது மற்றய அமைச்சர்கள் யாருக்காவது தெரியுமா ???

    முதலில் தெரிந்தால்தானே இது சம்பந்தமாக நடவடிக்கை எடு்க்க............

    அரச அரசசார்பற்ற ஊழியர்களில் எத்தனை பேர் இதனால் லீவு இன்றி அவதியுறுகிறார்கள் என்று உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது ???????

    சரி பரவாயில்லை இனியாவது நடவடிக்கை எடுப்பீர்களா ????

    ReplyDelete
  5. இந்த உண்மைகள் விளங்காத சிலர் மீலாத் விழாவை சிலை வணக்கம் போல் சித்தரித்து, அதை செயல்படுத்தும் முஸ்லிம்களை தடுத்து வருவது சகிக்க முடியாத தவறாகும். "எங்களை விட அறிஞர்கள் இல்லை" என்ற கர்வ நிலையில் உள்ள தற்கால வழி கெட்ட அறிஞர்களை விட பல்லாயிரம் படித்தரத்தால் அறிவாலும், இறையச்சத்தாலும் மென்மையான நேர்வழி பெற்ற இமாம்கள் அனைவரும் அனுமதித்துள்ள மீலாதுன் நபி விழாவை வழிகேடவர்களின் விசமகருத்திட்காக தவிர்க்க வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை.

    மாறாக மீலாது நபி விழாவை பெரு மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதே அல்லாஹ்வின் விருப்பமாகும். எப்படி என்றால்,
    "அல்லாஹ்வுடைய "பள்ல்" " ரஹ்மத்" தைக் கொண்டு அவர்கள் (முஹ்மீன்கள்) மகிழ்ச்சி கொண்டாடட்டும்." என நபியே! நீங்கள் கூறுங்கள் அது அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகளை விட மிக சிறந்ததாகும். (10 - 58)

    மேற்கூறிய மறை வசனத்தில் கூறப்பட்டுள்ள "பள்ல்" " ரஹ்மத்" என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என பல தப்சீர் கலை அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

    ஆகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பையும், அதனுள் பொதிந்துள்ள சிறப்புகளையும் எடுத்து கூறுவது குர் ஆன், ஹதீசுக்கு மாற்றமில்லாத சுன்னத்தான நல்ல அமலாகும்.

    எனவே இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவதரித்த மீலாதின் அருள் அந்த மாதம் முழுவதிலும் உண்டு என்பதை புரிந்து ரபிஉல் அவ்வல் மாதத்தை முஹுமீன்கலாகிய நாங்கள் நன்றி உணர்வோடு கொண்டாடி நற்பேறு பெறுவோமாக! -

    ReplyDelete
  6. Allah Said: Rejoice in the Prophet

    THIRD: To express happiness for the Prophet coming to us is an obligation given by Allah through Qur’an, as Allah said in Qur’an: “Of the favor and mercy of Allah let them rejoice” (Yunus 58).

    This order came because joy makes the heart grateful for the mercy of Allah. And What greater mercy did Allah give than the Prophet himself, of whom Allah says, “We did not send you except as a mercy to human beings” (Al-Anbiya’ 107).

    Because the Prophet was sent as a mercy to all mankind, it is incumbent not only upon Muslims, but upon all human beings to rejoice in his person. Unfortunately, today it is some Muslims who are foremost in rejecting Allah’s order to rejoice in His Prophet.

    ReplyDelete
  7. Allah Said: Rejoice in the Prophet

    THIRD: To express happiness for the Prophet coming to us is an obligation given by Allah through Qur’an, as Allah said in Qur’an: “Of the favor and mercy of Allah let them rejoice” (Yunus 58).

    This order came because joy makes the heart grateful for the mercy of Allah. And What greater mercy did Allah give than the Prophet himself, of whom Allah says, “We did not send you except as a mercy to human beings” (Al-Anbiya’ 107).

    Because the Prophet was sent as a mercy to all mankind, it is incumbent not only upon Muslims, but upon all human beings to rejoice in his person. Unfortunately, today it is some Muslims who are foremost in rejecting Allah’s order to rejoice in His Prophet.

    ReplyDelete
  8. இந்த வருடாந்த யூத கிறிஸ்தவ சடங்குகளை விட்டு விட்டு அல்லாஹுவை எந்த இடத்திலும் என்னேரமும் பயந்து நபி முஹம்மது (ஸல்) அவர்கள் எடுத்காட்டிய வழிமுறைகளை உங்கள் அன்றாட வாழ்கையில் பிரதிபலியுங்கள் அதுதான் உண்மையான மீலாத் விலாவாகும் மேலும் நபி (ஸல் ) அவர்கள் களவெடுக்காதீர்கள் மற்றவர்களின் உருமைகளை சூறையாடாதீர் என்று தடுத்துள்ளார்கள் அதனை செய்யுங்கள் நபி பிறந்தன்று நோன்பு பிடிக்கும்படி நமக்கு கூறியுள்ளார் அதை செய்யுங்கள் அப்பகுதி பள்ளிகளை புதிபிக்க அங்குள்ள மக்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை தெளிவுபடுத்த தினந்தோரும் பலவழிகளை ஏற்படுத்துங்கள் இதன் மூலம் அங்குள்ள பள்ளிகளும் மதுரசாக்களும் எழுச்சியடையும்

    ReplyDelete

Powered by Blogger.